எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள் - ( S. Ramakrishnan Quotes )

கோப்பு: தேசாந்திரி பதிப்பக விழா -  25.12.2012


எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள். (S.Ramakrishnan Quotes). தமிழில் ஒரு முன்னணி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்ன். இவருடைய Quotes எங்கு தேடியும் கடைக்கவில்லை.  ஆங்கிலத்தில் உள்ள்து போல தழிழ் எழுத்தாளர் Quotes கிடைக்கவில்லை தான். அதான் நானே இதில் இறங்கி முடிந்தவரை சேகரித்து பதிவு செய்துஉள்ளேன். இது கொஞ்சம் தான்
என்று தெரியும் இப்போதிக்கு இதை பதிவு செய்கிறென். முடிந்தவரை Update செய்றன். நீங்களும் எனக்கு அனுப்பலாம், அதையும் நான் Update செய்கியிறேன். 
தாயின் ஆசைகள் வெளிப்படாதவை. அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகு தான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போல தான் ஆம்மாவின் ஆசைகளும்! அவை வெளிபடாமலே ஒளிந்து கிடக்கின்ற்ன்.

  • வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான்.
  • உலகில் போர் கருவிகளுக்கு எந்த நாடும் தடை விதித்ததில்லை புத்தகங்களுக்குத் தான் தடை விதித்தார்கள்.
  • இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன்.
  • ’சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ’உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?’ என கலைவாணர் கேட்கும் கேள்விக்கு, ’நயவஞ்சகரின் நாக்கு’ என பதில் சொல்வார் எம்.ஜி.ஆர். அது முற்றிலும் உண்மை!
  • பாதுஷாவின் கட்டளைக்கு வேலையாட்கள் அடிபணிவார்கள் காற்று ஒருபோதும் அடிபணியாது.
  • எந்தப் புத்தகமும் வாய் திறந்து பேசாது. ஆனால் ஏதோ ஒரு குரல் புத்தக வாசிப்பிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்
  • வாழ்ந்து கெட்டவர்களுக்கு இழிவான ஒரு நிலை வந்தால், அவர்கள் யாசிக்கவேண்டிய ஒரு தருணம் வந்தால், அவர்கள் உடல் கூட தயாராகிடும், நாக்கு தயாராகாது. தடுமாறும்.
  • இருப்பதிலேயே  நீளமானது, வேலையில்லாதவனின்  பகல்.
  • ஒருத்தனை உலகம் புரிஞ்சிக்கிடாம போயிட்டா தப்பில்லை,ஆனா வீடு புரிஞ்சிக்கிடாமல் போயிட்ட அந்த வாழ்க்கை நரகம்தான்..
  • அன்றாடம் சிறியதும் பெரியதுமாக எத்தனையோ கோபங்கள் சிற்றலைகளைப்போல வீசிக் கரைந்து போய்கொண்டேதான் இருக்கின்றன. என்றாலும், கோபம் என்ற பாலத்தைக் கடந்து செல்லாதவர்கள் எவரும் இருக்கிறார்களா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. 
  • மோசமான மனிதன் என்று ஒருவன் கிடையவே கிடையாது. யாரோ சிலருக்கு மோசமான மனிதன்.
  • தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது.
  • துப்பாக்கிகள் தானே வெடிப்பதில்லை. அதை வெடிப்பதற்கு ஒரு மனிதன் தேவைப்படுகிறான்' என்று சிவப்பு இந்தியர்களிடம் ஒரு பழமொழி உண்டு. வன்முறையும் சிடுக்குகளும் நம்மால்தான் உருவாக்கப்படுகின்றன.
  • ஆசைப்பட்டவற்றை நிஜத்தில் அடைவது எளிதானதல்ல. பலரும் அவற்றை கற்பனையிலே அடைந்து கொள்கிறார்கள். அதுவே போதும் என்றுகூட நினைக்கிறார்கள்.கற்பனைக்கும் நிஜத்துக்குமான இடைவெளியைக் கடந்து வருவது எளிதில்லை. பேச்சை கற்றுக்கொள்வதைப்போல் மௌனத்தை எளிதில் கற்றுக்கொள்ள முடியாது. மௌனத்தில் சொற்கள் குளத்தில் மூழ்கிடக்கும் கற்களை போல அமிழ்ந்து கிடக்கின்றன .மௌனத்தில் மனம் சலனமற்று கிடக்கிறது .
  • சொந்த ஊர் என்பது முதுகில் உள்ள மச்சத்தைப் போல அவர்களால் திரும்பி பார்க்கவே முடியாது.
  • பொய்கள் எளிதாகப் பழகிவிடுகின்றன. உண்மையைச் சொல்வதற்கு தான் நிறைய நடிக்க வேண்டியிருக்கிறது. வீடு மாறிப் போவது என்பது வெளிக்காட்டிக் கொள்ள முடியாத ஊமை வலி.எல்லா வெற்றிகளும்ச ந்தோஷங்களும் துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கின்றன என்பது எவ்வளவு வேதனையானது. இவ்வளவுதானா மனித வாழ்க்கை? வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு மட்டும்தானா? (இடக்கை).
  • வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான்.
  • எதை நம்புகிறோமோ அதையே மறுக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்த நூற்றாண்டின் குரல் அதுதான். எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதைச் செய்யவே நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் வாழ்க்கை நெருக்கடியாக இருக்கிறது.
  • திறக்கப்படாத கதவுகளுக்கு முன் நிற்பதின் அவமானத்தை நான் நன்கு அறிந்தவன்.
  • எந்த தீக்குச்சியும் முழுமையாய் எரிவதில்லை!
  • கதைகள்தான் கடவுள்களையே காப்பாற்றி வைத்திருக்கின்றன .
  • பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போன விஷயங்களை வயது தானே கற்றுக்கொடுத்து விடுகிறது. வயதாவது என்பது மனித அற்புதங்களில் ஒன்று. அதை வெறும் பிறந்தநாள் கொண்டாட்டமாக மட்டுமே சுருக்கி வைத்திருக்கிறோம்.
  • என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகையாட்டம் தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலயின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையை சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு .எறும்புகள் இழுத்துக்கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்து விட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்.
  • ஒரு நாளின் தொடக்கம் என்பது பிரச்சனைகளின் ஆரம்பமாகவே இங்கே பலருக்கும் இருக்கிறது.
  • ஒவ்வொரு நாள் உதிரும் போதும் அது தனது சுவடுகளை, நம் உடலில், சுற்றியுள்ள இயற்கையில் , நதியில், காற்றில் ஆகாசத்தில் விட்டுப் போகிறது.
  • கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம்.
  • வாழ்வு கற்றுக் கொடுப்பதைவிட அதிகமாக மரணம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. வாழ்வு குறித்த ஆயிரமாயிரம் போதனைகளை நீதிநெறிகளை சாவு ஒரு நிமிசத்தில் திருத்தி எழுதி விடுகிறது. இறந்துபோனவர்களைப் பற்றிப் பேசுகையில் தென்மாவட்டங்களில் நினைவில் வாழ்பவர்கள் என்று சொல்வார்கள். நகர வாழ்வில் நம்மோடு உடன் வாழ்பவர்களையே நாம் கவனிப்பதில்லை. அக்கறை எடுப்பதில்லை. இதில் நினைவில் வாழ்பவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும். (ஆதலினால்).
  • "வாழ்வின் தராசில் யாவும் விற்பனைக்காக நிறுத்தப்பட துவங்கிவிட்டன. நாம் இன்னமும் நம்மை மட்டும் விற்பதற்கு விலை பேசாமல் இருக்கிறோம், சந்தர்ப்பம் இல்லாமலா அல்லது விலை நிர்ணயிக்க முடியாமலா என்று மட்டும்தான் தெரியவில்லை? 
  • வெற்றி பெற்றவனை விட தோற்றவனிடம் தான் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் போல் இருக்கிறது .. காரணம் - வெற்றி விளையாட்டை பெருமை கொள்ள செய்கிறது, தோல்வி விளையாட்டை புரிந்துகொள்ள செய்கிறது.. எல்லா விளையாட்டு வீரர்களும் ஒரு முறையாவது தோற்றவர்கள்தானே..
  • உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள் ” - (ஜன்னல் வழியான உலகு).
  • இது நாள் வரை நகரையும் பாண்டவர்களையும் பற்றிப் பீடித்திருந்த ஆசைதான் நாய் உருவம் கொண்டு அவர்கள் மின் வந்திருக்கிறது என்பதைக் கண்டான். சதா விழிப்புற்றபடி அலைந்து கொண்டிருக்கும் வேட்கையென்னும் அந்த நாய் உருவினைக் கண்டபடியிருந்த அவனும் பிறகு தன் கண்களை மூடிக் கொண்டு விட்டான்.
  • கிருஷ்ணை யாருமற்ற தன் அறையில் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு தன் புத்திரர்களை விடவும், கணவர்களை விடவும், பிரியத்திற்கு உரியவனாக கிருஷ்ணன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. திரௌபதி உறவின் வரம்புகளுக்குள் கிருஷ்ணனை வைத்துக்கொள்ளவில்லை. அவன் கிருஷ்ணன். அதுவே போதுமானதாய் இருந்தது.
  • செல்ல முடிந்ததைப் போல பல மடங்கு எடையைத்தான் எப்போதும் இழுத்துக் கொண்டு போகின்றன. அது பேராசையல்ல. மாறாக உழைப்பின் மீதான பெரிய நம்பிக்கை. தன்னால் செய்ய இயலும் என்ற உத்வேகம்.
  • உலகில் மாறாத இயக்கங்களில் ஒன்று எறும்பின் அலைச்சல்.
  • இப்படி ஒவ்வொரு நாளும் நம் வாழ்வோடு நூற்றுக் கணக்கானவர்களின் வாழ்வு பின்னப்பட்டிருக்கிறது.அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு மனிதருக்குக் கூட நன்றி சொல்வதில்லை.
  • விதையைத் துப்பி எறிவது மிகச் சுலபம். ஆனால் விதையிலிருந்து ஒரு விருட்சத்தை உண்டாக்கிக் காட்டுவது மிகப்பெரிய செயல் என்று சொல்வான்.
  • ஒரு விதையைக் காணும்போது அதனுள் ஒடுங்கியுள்ள விருட்சம் நம் கண்ணில் தெரிவதில்லை.
  • மனிதர்கள் இயற்கையைப் புரிந்துகொள்ள தவறியதோடு இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தவறியிருக்கிறார்கள்.
  • படகில் பயணம் செய்கின்றவர்களில் ஒருவர்கூட அதைச் செய்த மரத் தச்சனை நினைப்பதில்லை. இது, நாம் மேற்கொள்ள வேண்டிய கவனம்.
  • நம்மை இந்தப் பிரபஞ்சத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஏதோ ஒரு மருத்துவச்சியோ அல்லது பெண் மருத்துவரோதான். நம் உடலில் அவரது விரல்களின் ஸ்பரிசம் கண்ணுக்குத் தெரியாமல் படிந்திருக்கிறது.
  • உலகம் எண்ணிக்கையற்ற கதவுகள் கொண்டது.
  • நாக்கு மென்மையானது. ஆனால், அதில் இருந்து வெளிப்படும் சொற்கள் மென்மை யானவை இல்லை. அதிலும் கோபத்தில் ஒருவரை நோக்கி வீசப்படும் சொற்கள் வலிமையான ஆயுதமாகவே உருமாறிவிடுகிறது.
    கோபத்தைக் கையாளத் தெரிய வில்லை என்பதுதான் பலருக்கும் பிரச்சினை. அது போலவே யாரிடம் கோபம் கொள்ளவேண்டும் என்றும் தெரிவது இல்லை. பெரும்பான்மையினரின் கோபம் வீட்டில்தான் அரங்கேறுகிறது. இன்னும் சிலர் எதற்கு கோபம் கொள்கிறார்கள் என்று அறியாமலே வெடிக்கிறார்கள். எளிய மனிதர்கள் கோபம் கொண்டாலும், அதைக் காட்ட முடிவதில்லை. மனதுக்குள்ளாகவே அடக்கிக் கொள்கிறார்கள்.



  • உரைநடை என்பது சந்தையைவேடிக்கை பார்ப்பது போன்றது- கவிதை என்பது நீர்நிலையை நாடிவரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பது போன்றது.
  • பழக்கம் என்பது ஒரு மோசமான விசயம். எனது மிகப்பெரிய பலவீனம் என்னிடமிருக்கும் சில பழக்கங்கள் தான். அவைதான் என்னை வளரவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றன. சில வேளைகளில் யோசிப்பதுண்டு பழக்கம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு தந்திரம், நமது பலவீனங்களை நியாயப்படுத்தும் ஒரு மோசடிவேலை. அதுதான் நிஜம், அது மட்டுமே நிஜம். இவை எல்லாம் அறிவிற்கு நன்றாகவே தெரிகிறது. ஆனால் என்னை மாற்றிக் கொள்வது கடினம் என்று நானாக முடிவு செய்திருக்கிறேன். (ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப் - சிறுகதையிலிருந்து).
  • சிலருக்கு கோபம் வரும்போது எவ்வளவு முட்டாள்தனமாக நடந்துகொள் வார்கள் என அவர்களுக்கே தெரிவதில்லை. ரொம்பவும் கோபப்படுகிறவர்களுடன் யாரும் பழக மாட்டார்கள். பலரும் யாராவது கோபப்படுத்தினால், சட்டென வார்த்தைகளைக் கொட்டி விடுகிறார்கள்.

Comments

  1. அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete

Post a Comment