விமலா என்கிற சிறுவயது பெண் - சிறுகதை


by arisuonpaa (deviantart)


                                                            ஒரு அழகிய பதினைந்து வயது பெண் , அவள் பெயர் விமலா. விமலாவும் அவளது அம்மாவும் கிராமத்தில் வாழ்கிறார்கள். ஒரு நாள் விமலா அம்மா அவளிடம் அவளது பாட்டிற்க்கு தோட்டத்தில் இருந்து எடுத்த புதிய பழங்களும் மற்றும் நல்ல குடிநீர் எடுத்து செல்ல சொன்னால் - இது பெண்கள் வேலை என்று பிரித்து எடுத்து செல்ல சொல்லவில்லை, உங்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள் , இதில் சமுக உணர்வு மற்றும் காரணம்  இருப்பதால் மட்டுமே சொன்னால். மேலும், அவள் பாட்டிற்கு உடம்பு நன்றாக இருந்தது. ஒரு முதிர்ந்த வயதினராக தன்னை கவனித்துக்கொள்வதற்கு முழு திறமையும் பாட்டிற்கு இருந்தது.

எனவே விமலா ஒரு பையில் பழங்கள் மற்றும் தண்ணிரை எடுத்து கொண்டு பாட்டி விட்டுக்கு சென்றால். பாட்டி வீடு செல்லும் வழி ஒரு அடர்ந்த காட்டு பகுதி கடந்து செல்ல வேண்டும். அங்கு இருக்கும் நிறைய பேர் இந்த காடு பாதை ஒரு ஆபத்தான, இருட்டான பாதை, பேய்கள் இருக்கும் பாதை, வழிபறிகள் நடக்கும் பாதை என்று நம்பினார்கள். ஆனால் விமலா நல்ல தன்னம்பிக்கை கொண்டவளாக இருந்தால். அந்த வளரும் பாலினம் சார்ந்த கற்பனை சார்ந்த பயம் அவளை உணர்ச்சி ரீதியாக ஈர்க்கவோ பயம்புத்தவோ இல்லை.

பாட்டி வீட்டிற்கு போகும் வழியில், ஒரு நரி அவளை வழிமறித்து நின்றது. அவளது பையில் என்ன இருக்கிறது என்று கேட்டது. அதற்கு அவள் பழங்கள் மற்றும் தண்ணிர் அவளது பாட்டிக்கு எடுத்து செல்வதாகவும் பாட்டி அவளை கவனித்து கொள்ள திறன் கொண்டவள் என்றும் சொன்னால்.


by Send-My-Regards (Deviantart)

அதற்க்கு அந்த நரி "பாப்பா உனக்கே தெரியும், இந்த அடர்ந்த காடு உன்ன மாறி சின்ன பொண்ணுக்கு நடந்து போவ பாதுகாப்பான பாதை கிடையாது"

"உங்கள் பார்வையில் ஒரு பெண் என்ற பாலியல்ரீதியான கவர்ச்சி கருத்தை நான் மறுக்கிறேன். நீங்கள் வளர்ந்த இந்த சமுதாயம், பாரம்பரியம், மன அழுத்தம், மதம் உங்களை இப்படி தோற்றுவித்திருக்கிறது. நீங்கள் கொஞ்சம் நகர்ந்து நின்றால் நான் என் வழியில் செல்வேன்" என்று விமலா கூறினால்.


விமலா அவள் பாட்டி வீட்டிற்கு போகும் பாதையில் சென்று கொண்டு இருந்தால். இந்த உலகம் நரிக்கு குறுக்கு புத்தி,மேற்கத்திய பாணியிலான அடிமைத்தனம் போன்ற கருத்தகளை பின்பற்றகூடிய விலங்கு என்று சொல்லி கொடுத்து வந்ததால்,மேலும் ஒரு பெண் தன்னை பார்த்து கேள்வி எழுப்பியதால் நரி தனது மரியாதையை கெடுத்த கோபத்தில் குறுக்கு வழியில் விமலாவின் பாட்டி வீட்டிற்கு சென்றது. நரி பாட்டியின் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பாட்டியை முழுங்கிவிட்டது. பிறகு தனது தோற்றம் விளங்கு மாறி இருந்தாலும் பாட்டியின் உடையை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்து கொண்டது.

சிறிது நேரத்தில் விமலா பாட்டி வீட்டற்கு உள்ளே சென்றால். அவள் வந்த குஷியில் சத்தமாக "பாட்டி! நான் உங்களுக்கு உடல் மேலும் வலுவாக தோட்டத்தில் பறித்த கொழுப்பு இல்லாத பழங்கள் மற்றும் தண்ணிர் கொண்டு வந்து இருக்கிறேன்" என்று கூறினால். பாட்டி முகத்தை எதிர்முனை நோக்கி இருப்பதால் அவளால் பார்க்க முடியவில்லை.

படுக்கையில் இருந்த நரி, "பக்கத்தால வா பாப்பா, என்னால உன்ன சரியா பக்க முடியல" என்று உடல் மெலிந்த பாட்டி குரல்லில் பேசியது.

பாட்டி உனக்கு வவ்வால் உயிரினம் போல பார்வை பற்றாகுறை இருக்கிறது.

ஆஹா இவ்வளவு பெரிய கண்கள்! பாட்டி உனக்கு இருக்கு..

கண் விங்கி பொய் இருக்கு பேத்தி.. அதான் பெருசா இருக்கு...

பாட்டி கண்ணை விடு உன் மூக்கு பெருசா இருக்கு பாரு !! உன் முகத்துக்கு ஏத்த மாதிரி அழகா தான் இருக்கு இப்போ...

உடனே பாட்டி (நரி) நான் நானாக இருப்பதில், நான் எப்படி இருக்கிறோனோ அதுவே எனக்கு மகிழ்ச்சி தான்.


by friendbeast (Deviantart)

அதன்பின், நரி விமலாவை இறுக்கி பிடித்து கொண்டது. விமலாவை ருசித்து உன்ன தயார்படுத்திக் கொண்டு இருந்தது.

பட்டியின் தோற்றம் மிகவும் கேவலமாக இருக்க அதை பக்கத்தில் வைத்து பார்த்தால் பயந்து விமலா கத்தினால்.


விமலா கத்திய சத்தம் அந்த வழியாக நடந்து சென்று கொண்டு இருந்த விறகு /மரம் வெட்டுபவர். உடனே அவர் சினிமாவில் வருவதுபோல வீடு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றார். நரி அவளை தாக்கபோவதை பார்த்து சினம் கொண்டு தன் கையில் இருந்த கோடாரியை ஓங்கினார்.......... நரியும் அவளும் இவனை பார்த்து நின்றார்கள்.

"இப்ப என்ன நடக்குதுன்னு நினைச்சு நீ உள்ள வந்து கோடாரி எடுக்குற ?" என்று விமலா கேட்டால்.அவன் அவள் கேள்வியால் திகைத்துபோய் பதில் சொல்லுவது போல பாவித்து கொண்டான் , ஆனால் ஒரு வார்த்தை கூட அவன் வாயில் இருந்து வரவில்லை. பதில் சொல்ல ஏதோ முற்பட்டான்....

"தமிழ் சினிமால ஹீரோ ஆம்பள ஆம்பள-னு வர மாறி வந்து இப்படி நிக்குற ?
ஏய் !"ஆணாதிக்கவாதி", ஒரு பொண்ணும் நரியும் அவங்க பிரிச்சனையை
ஆம்பள இல்லாம எப்படி தீர்க்கமுடியதாணு நீயா நினனக்கலாம் ? என்று கத்தினால்.

விமலாவின் ஆணாதிக்கஎதிர்த்த உணர்ச்சிமிக்க குரலை கேட்ட பாட்டி நரியின் வாய் வழியாக குதித்து வெளியே வந்து, அவன் கையில் இருந்த கோடாரியை பிடுங்கி அவன் தலையை வேட்டி சாய்த்தது.

இந்த சம்பவம் முடிந்த பிறகு, பாட்டி, நரி மற்றும் விமலா அவர்களின் தனிப்பட்ட நோக்கம் ஆசையை புரிந்துகொண்டு. அதன்படி, அவர்கள் ஒரு மாற்று குடும்பத்தை அமைத்தனர் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. அதன் பின் அவர்கள் அந்த காட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்..

****சுபம்****

இந்த கதை என் சொந்த கதையில்லை. வெங்கட் பிரபு எப்படி வெளிநாட்டு படம் பார்த்து இங்கு கொஞ்சம் மாத்தி புதுசா ஒரு படம் எடுக்குறாரு அதே மாதிரி தான் இதுவும். இந்த கதை " Political correct Bedtime stories : Modern tales for our life and times" by James finn garner in 1994-ல வெளிவந்த புத்கத்தல இருந்து " Little Red Riding Hood " கதையை தான் Alter பண்ணி இங்கு எழுதிருக்கேன்.

Comments

Post a Comment