Posts

Showing posts from December, 2017

எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள் - ( S. Ramakrishnan Quotes )

Image
கோப்பு: தேசாந்திரி பதிப்பக விழா -  25.12.2012 எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள். ( S.Ramakrishnan Quotes). தமிழில் ஒரு முன்னணி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்ன் . இவருடைய Quotes எங்கு தேடியும் கடைக்கவில்லை.  ஆங்கிலத்தில் உள்ள்து போல தழிழ் எழுத்தாளர் Quotes கிடைக்கவில்லை தான். அதான் நானே இதில் இறங்கி முடிந்தவரை சேகரித்து பதிவு செய்துஉள்ளேன். இது கொஞ்சம் தான் என்று தெரியும் இப்போதிக்கு இதை பதிவு செய்கிறென். முடிந்தவரை Update செய்றன். நீங்களும் எனக்கு அனுப்பலாம், அதையும் நான் Update செய்கியிறேன்.  தாயின் ஆசைகள் வெளிப்படாதவை. அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகு தான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போல தான் ஆம்மாவின் ஆசைகளும்! அவை வெளிபடாமலே ஒளிந்து கிடக்கின்ற்ன். வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான். உலகில் போர் கருவிகளுக்கு எந்த நாடும் தடை விதித்ததில்லை புத்தகங்களுக்குத் தான் தடை விதித்தார்கள். இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன். ’சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் இடம்பெற

ஹார்ட் ராக் இசை லைவ் - Behind the Horizon live

Image
எனக்கு கடந்த 1 வருடமாக மிகவும் பிடித்த பாடலாக " Can you feel my heart" உள்ளது. இதை பாடியது மற்றும் இசை அமைத்தது "Behind Me the Horizon" band. இவர்கள் ஒரு லைவ் செர்மானியம் செய்தார்கள். அதில் ஒரு special treat இருக்கு . அது இன்னா என்று கேட்டு இன்பத்தை பெறுங்கள். இதை பற்றி நிறைய தெரிந்த கொள்ள விக்கிபிடியா லிங்க் - Wiki பாடலின் வீடியோ லிங்க் - Full Videos Playlist here

காதல் அட்ராசிட்டீஸ் #1 - பிடிக்கல

Image
ஓவியம்  -  டொமினிக் அமெண்டோலா ( Dominique Amendola) Last night எனக்கும் அவளுக்கும் வக்குவாதம். கொஞ்சம் கடுமையா பேசிடன் , wantedஆ இல்ல அவ என்னொட work tension பத்தியும் தெரியமா மொக்க matterக்லாம் சண்டை போடுற. கொஞ்ம் over போய் let's break upனு வேற ,  சும்மா தான் சொன்ன.  She know that but, பேசின் விதம் சரியில்லை. ஒரு மாறியும் இருக்கு. I know  she is loving me unconditionally ! ❤   My room. மணி 3.30 pm வழக்கம் போல office work. Suddenly கதவு திறந்து அவ வந்தா ! Me: உண்ண எனக்கு பாக்கவே பிடிக்கல! (கொஞ்ம் soundஆ பேசுயிதில் பயந்தடா) ஒரு jerk விட்டு அவள்: (மெல்லிய குரலில்) உண்ண பாக்க எனக்கும் பிடிக்கல? Me: அப்புறம் எதக்கு Trichyla இருந்து midnightla கிளம்பி chennaiக்கு வந்த?  அவள்: ( கோவமக) உன்ன பிடிக்கலனு சொல்ல தான் வந்தேன். ❤ (இருவரும் இருவர் கண்களை சிறிது விநாடிக்கு வெறிக்க பார்த்தக் கொண்டோம்) பின், இருவரும முத்தங்களை கோவமக பரிமாறி கொண்டோம் 😘😘😘

கல்யாணி (சிறுக்கதை) - பிரபு காளிதாஸ்

Image
நமது தலைவர் பிரபு காளிதாஸ் அவர்களின் இரண்டாம  சிறுக்கதை..................

குணா (சிறுக்கதை)- பிரபு காளிதாஸ்

Image
பிரபு காளிதாஸ் முதல் சிறுக்கதை குங்குமம்   இந்த வார இதழ் வெளிவந்தது. “அந்த பொறுக்கிப் பசங்களோட சேர்றத எப்ப நிப்பாட்டுறியோ அன்னிக்கிதான்டா நாம ஒரு வேளையாவது சாப்ட முடியும். உங்கப்பன் குடிச்சே செத்தான். நீ பள்ளிக்கூடம் போவுறதயும் நிறுத்திட்டே. எங்கனயாவது வேலைக்கிப் போயி நாலு காசு கொண்டு வந்து குடுத்து பாப்பாவையாவது படிக்க வெச்சி கரை சேர்க்கலாம்னு பாத்தா... நீ தெனம் அந்த நாய்ங்க பின்னாடியே சுத்தறே.   ஏதாவது உருப்புடியாப் பண்றா...” காலையிலேயே குணாவின் அம்மா ஆரம்பித்து விட்டாள். கயிற்றுக் கட்டிலிலிருந்து பொறுமையாய் எழுந்து உட்கார யத்தனித்தபோது அவன் பின்னந்தலையில் நொங்கென்று ஒரு வெளிர் மஞ்சள் பிளாஸ்டிக் குடம் பட்டு உருண்டு ஓடியது. அவன் திரும்பவேயில்லை.  நிச்சயம் அவன் தங்கை வேணிதான். ஸ்கூல் கிளம்புவதற்கு முன் அவள் இந்தச் செய்கையை தினம் செய்துவிட்டுத்தான் கிளம்புவாள். ஆற்றிலிருந்து இருபது குடம் தண்ணீர் தூக்கி வந்து தொட்டியை நிரப்ப வேண்டும். அம்மா வீட்டு வேலை பார்க்கக் கிளம்பி விடுவாள். இருபது குடங்களில் ஐந்தாவது குடம் தூக்கித் தொட்டியை நிரப்புவதற்குள் பொறுக்கிகளில் எவனாவது ஒர

பெரியாரின் பழமொழிகள்

Image
ஓவியம்  - ஹாசீப்கான் (Hasif Khan) ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவது தானே தவிர தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல! என்னை சட்டசபைக்குப் போகச் சொல்கிறார்கள். அங்கே போய் ஒன்றும் சாதிக்க முடியாது. வெளியில் இருந்து கொண்டுதான் பாழடைந்த கட்டடத்தை இடிக்க வேண்டுமே தவிர, உள்ளே இருந்து இடித்தால் நம் தலையில் தான் அது விழும்! நீதியை மதிக்கிறேன். ஆனால் நீதிமன்றத்தை மதிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! எனது பலக்குறைவினால் பல குறைகள் நேர்ந்தாலும் பொதுவாழ்வில் நான் சாகாமல் இருக்க நேர்மையில் நான் காட்டும் ஜாக்கிரதை தான் காரணம்! நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். எனது பகுத்தறிவு சரி என்று சொல்வதை நான் சொல்கிறேன். நீங்கள் உங்கள் பகுத்தறிவு சரி என்று சொல்வதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். தண்ணீர் எவ்வளவுதான் சூடாக ஆனாலும் நெருப்பை அணைக்கத்தான் முடியும். எரிய வைக்க முடியாது! எந்தவிதமான உணர்ச்சிக்கும் இடமில்லாத மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மனிதர்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும் என்ற கவலை எனக்குச் சிறிதும் இல்லை. அப்படி போலி நல்ல பெயர் மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை! நான்

அடுத்த மரீனா  - நெடுவாசல்!

Image
அடுத்த மரீனா ,நெடுவாசல் என்றே சொல்ல வெண்டும். இளைஞர்கள் கூடுவதால் அடுத்த புரட்சி ஆரம்பம். நெடுவாசல் பெயர் மேல இருக்கும் அரசுக்கு தெரிந்ததே என்று தெரியவில்லை,தமிழ்நாடு இளைஞர்கள் மொபைலில் ஒலித்து கொண்டு இருகின்றது. இளைஞர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு போல் இதில் வெற்றி வாகை சூடுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் ஒருமுறை விழித்தெழுந்துவிட்டால் அவர்களை மறுபடியும் யாராலும் தூங்க வைக்க முடியாது!  -பகத்சிங் ஜல்லிக்கட்டு போராட்டம் இவர்களை எழுப்பி விட்டது என்றே சொல்வேன்டும்.இவர்களை துங்கா வைக்க சிறிது காலம் வெண்டும். போராட்டம் எதற்காக என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். அது மிகவும் முக்கியம்.பிறகு யாராவது கேள்வி கேட்டால் கூட பதில் சொல்ல முடியும். (குறிப்பு: எச்.ராஜாவுக்கு பதில் சொல்ல).போன ஜல்லிக்கட்டு போராட்டம் போதே T.Vயில் மாணவர்களுக்கு தெரியாமல் போராட்டம் என்றால் கூடி விடுவார்கள் என்பது போலும் காண்பிக்கப்பட்டது. அது சரி தான் நமக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிந்துகொள்ள வேண்டும். அது ஏன்? எதற்கு? எப்படி? கேள்வியும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு தெளிவ