Posts

Showing posts from April, 2018

காந்தி நமக்கு வில்லனா ? - காந்தியார் சாந்தியடைய

Image
புத்தகத்தின் அட்டை படம்                                                         மகாத்மா காந்தி இந்த உலகம் போற்றபடும் தலைவர். தலைவர் என்பதைவிட மக்களின் ஒருவன் என்பதே சரியாக இருக்கும். ஆனால் இந்தியர்களில் சிலர் அவரை பிடிக்கவில்லை என்று சொல்லுவது அறிவார்ந்த செயல் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நான் காந்தியை இன்றும் முழுவதும் புரிந்து வைத்து பேசுகிறேன் என்று சொல்லுவது சரியாக இருக்காது காரணம் அவர் பல பரிமாணம் கொண்டவர். காந்தியை கடைசி வரை எதிர்த்த பெரியார் அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்துபோய் சொன்னார் காந்தி ஒரு மகா பெரியவர்! இயேசு, புத்தர் போன்றருக்கு நிகரானவர் காந்தி என்று தனது குடியரசு நாளிதழில் ( 14.02.48) கூறுகிறார். ஆனால் இன்று நான் பள்ளியில் படிக்கும்போது சரி, நான் மேல்படிப்பு படிக்க வெளிநாடு சென்றபோதும் சரி காந்தி ஒரு தே****** டா! என்று வெவ்வேறு வைசைமொழியை வைத்தே காந்தியின் பெயரை கேட்டு இருக்கிறேன். நான் எப்போதும் நினைப்பது, இதை கேட்பதற்கு காந்தியை கொன்ற கோட்சேயின் மூன்று குண்டுகள் மேல். இந்தியாவில் பிறந்த இந்த அறிவுஜீவிகளால் தினமும் அந்த மூன்று குண்டுகளை விட மோச