காந்தி நமக்கு வில்லனா ? - காந்தியார் சாந்தியடைய


புத்தகத்தின் அட்டை படம் 

                                                       மகாத்மா காந்தி இந்த உலகம் போற்றபடும் தலைவர். தலைவர் என்பதைவிட மக்களின் ஒருவன் என்பதே சரியாக இருக்கும். ஆனால் இந்தியர்களில் சிலர் அவரை பிடிக்கவில்லை என்று சொல்லுவது அறிவார்ந்த செயல் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நான் காந்தியை இன்றும் முழுவதும் புரிந்து வைத்து பேசுகிறேன் என்று சொல்லுவது சரியாக இருக்காது காரணம் அவர் பல பரிமாணம் கொண்டவர். காந்தியை கடைசி வரை எதிர்த்த பெரியார் அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்துபோய் சொன்னார் காந்தி ஒரு மகா பெரியவர்! இயேசு, புத்தர் போன்றருக்கு நிகரானவர் காந்தி என்று தனது குடியரசு நாளிதழில் ( 14.02.48) கூறுகிறார்.

ஆனால் இன்று நான் பள்ளியில் படிக்கும்போது சரி, நான் மேல்படிப்பு படிக்க வெளிநாடு சென்றபோதும் சரி காந்தி ஒரு தே****** டா! என்று வெவ்வேறு வைசைமொழியை வைத்தே காந்தியின் பெயரை கேட்டு இருக்கிறேன். நான் எப்போதும் நினைப்பது, இதை கேட்பதற்கு காந்தியை கொன்ற கோட்சேயின் மூன்று குண்டுகள் மேல். இந்தியாவில் பிறந்த இந்த அறிவுஜீவிகளால் தினமும் அந்த மூன்று குண்டுகளை விட மோசமாக கொல்லபடுகிறார் காந்தி. காந்தியை ஆர்.எஸ்.எஸ் மட்டும்  எதிர்க்க வில்லை நேதாஜியை ஒழுங்கா படிக்காதவர்கள் மற்றும் பின்பற்றுவர்கள் (அவருக்கு காந்தி மேல் உள்ள பற்று கூட இவர்களுக்கு இல்லை), சில நாட்கள் முன் நேருவை ஒதுக்கி பட்டேலை முன்னிறுத்தி பாராளமன்றத்தில் பேசிய மோடிஜியை கைத்தட்டி வரவேற்ற மோடி அலை ரசிகர்கள், தேவர் குளத்தில் பிறந்து நேதாஜியை உறுவபடத்தியில் (நேதாஜியை படிக்காதவர்கள்) மட்டுமே பார்த்து காந்தியை வேறுபவர்கள், அம்பேத்கர் புத்தகத்தை மட்டுமே படித்து காந்தியின் மீது விஷயத்தை துப்புவர்கள் என்று எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது தவிற குறையவில்லை. இவர்களுக்கு தெரிந்த காந்தி எல்லாம் இந்தய ரூபாய் தாளில் சிரிக்கும் காந்தி மட்டுமே! அவர் சுதந்திரம் முன்பும் சுதந்திரம் கிடைத்த பின்பும் நாட்டின் மக்களின் ஒற்றுமை மீது கவலை கொண்டு போராடியதும், தான் இறக்கும் முன்பு கூட பாக்கிஸ்தானில் இருக்கும் மக்களும் நம் மக்களே அவர்களுக்கு 50 கோடி கொடுத்து உதவுங்கள் என்று மனிதத்தன்மையோடு போராடியவர் ஆனால் பணத்தில் சிரிக்கும் காந்தியை பார்க்கும் உங்களுக்கு தெரிவது கஷ்டம்தான்.  இதற்க்கு புதிய இந்தியா பிறந்தால் என்ன  பிறக்காமல் போனால் என்ன ?

கோட்சே கைது பிறகு எடுக்கபட்ட புகைப்படம் 
                                     
                                                காந்தியார் சாந்தியடைய என்ற 12 பக்கம் புத்தகம் 1950 யில் தடைசெய்ய பட்டது அதை எழுதிய ஏ.வி.பி ஆசைத்தம்பி (திமுக) கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் இருக்கிறார்.  அவருக்கு சிறையில் மொட்டை அடிக்கபடுகிறது. இந்த புத்தகத்தின் பெயரிலும் கருத்தையும் அடிப்படை கொண்டு இன்னும் விரிவாக தெளிவாக 157 பக்கங்கள் கொண்டு 2007 யில் எழுதியுள்ளார் ப.திருமாவேலன் அவர்கள். இந்த ஒரு புத்தகம் போதும் காந்தி உண்மையில் யாருக்கு வில்லன் என்று புரிய வைப்பதற்கு.

காந்தி தென்னாப்பிரிக்க மக்களிடையே 
                 
                                                   காந்தி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது என்ன  என்று கேட்டால் உங்களின் பதில் இந்தியாவின் தந்தை என்பதாக இருக்கும். இந்த தந்தை என்பதில் தான் இங்கு இருக்கும் பல பேருக்கு உறுத்துகிறது.. இந்திய விடுதலைக்கு மிக பெரிய காரணம் இரண்டாம் உலக போர் , அதில் பிரட்டன் மிகவும் வலுவடைந்து வெற்றி பெறுகிறது. இரண்டாம் உலக போர் நடக்கவில்லை என்றால் நமக்கு சுதந்திரம் கொஞ்சும் தள்ளி போயிருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. பிறகு காந்தி என்ன செய்தார் என்ற கேள்வி வரலாம். காந்தி  ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அகிம்சைவழியில் போராட இணைக்கிறார் இதான் அவர் வெற்றி. இதில் என்ன வெற்றி என்று கூட சில அறிவு குஞ்சுக்கு தோன்றலாம். ஒரு மனிதரை பிரிட்டன் அரசங்கம் எந்த வித பாதிப்பும் அல்லாமல் பாதுகாத்து வந்து இருக்கிறது அது தான் காந்தி. அவருக்கு இருந்த மதிப்பு, மக்கள் செல்வாக்கு தான் காரணம். இதை அவர் மிக எளிதாக அடையவில்லை.  இதற்கான போராட்டம் பெரியது. அதை பற்றி பேசுவதற்கு முன் காந்தியின் அகிம்சைவழி போராட்டம் சிறந்தது அல்ல என்று அதே அறிவு குஞ்சுக்கு தோன்றும் தோன்றாமல் இருந்தால் தான் ஆச்சிரியம். அகிம்சை வழி போராட்டத்தில்தான் அதிக உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன, அப்ப இந்தியாவில் உயிர் இழப்புகள் இல்லையா என்றால் ஆம் நடந்து இருக்கு ஆனால் குறைவு இதுற்கு காரணம் காந்தி என்ற மனிதரின் போரட்ட குணம் தான். நாம் மற்ற நாட்டினர் போல குண்டு எடு போடு னு இருந்தா இந்தியாவில் இன்னும் நிறைய ரத்தம் தான் பதித்து இருக்கும். இதை காந்தி தனது அகிம்சைவழியாக மனிதனாக உணர்ந்து அமைதியாக போராட சொல்லி தருகிறார். நீ அமைதியாக இருப்பதே அவன் வீசும் குண்டை விட ஒரு பெரிய ஆயுதம் இது ஒரு புது வித புரட்சி என்று மக்கள் மனதில் நம்ப வைக்கிறார். ஒரு வேலை நாம் மிருகம்போல அவர்களை திருப்பி அடித்து குண்டு வீசி சுதந்திரம் கிடைத்து இருக்கமா என்றால் பதில் தெரியாது ஆனால் உன் இந்தியர்களை நாட்டு பற்று என்று கூறி மேலும் பலரை துண்டிவிட்டு கொன்று இருப்பாய். உன் முன்னோர்களை நல்ல வழியில் கூட்டிசென்றதில்  காந்தியின் பங்கு இல்லையா ?


                         காந்தி தீவிரமாக ஒன்று நம்பினார் அது ஹிந்து மதம் மூலம் ஒற்றுமை ஆனால் அவர் எதை நம்பினாரோ அதில் அதிக வெறி பிடித்த ஹிந்து நபர்களால் கொல்லப்பட்டனர். காந்தி ஹிந்து மதம் மக்கள் இடையே ஒற்றுமை தான் இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் மக்களும் இந்தியர்கள் தான் அவர்களை மதம் என்று கூறி ஒதுக்ககூடாது என்று கத்தினார் ஆனால் மத வெறி சாதி வெறி அவரின் பேச்சை விட தாண்டவம் ஆடியது.

காந்தி குழந்தையுடன்

காந்தியார் சாந்தியடைய என்ற புத்தகம் நான்கு பகுதியாக பிரித்து இருக்கிறார் நூல் ஆசிரியர்.

1. ராமராஜ்ஜியம் , 2.பாகிஸ்தான் , 3. இந்துஸ்தான் ,4. காந்திஸ்தான்  என்ற நான்கு பகுதி ஆகும். இதில் நான் மேலே கூறிய காந்தி எதிர்பாளர்கள் எல்லோருக்கும் இந்த நான்கு பகுதியில் விடை இருக்கிறது.  நான் புத்தகத்தை பற்றி பேசுவதற்கு முன் காந்தி ஏன் நமக்கு ஹீரோ வாக சிறு வயதில் மனதில் பதியவில்லை.
நாம் சிறு வயதியில் இருந்து ஹீரோவாக பார்பவர்கள் எல்லாம் திருப்பி அடிப்பவர், புரட்சி என்றால் அவன் கையில் ஒரு துப்பாக்கி வயதில் இளைஞன் என்று நமது சினிமா நம்மை காந்தி போன்றர்களிடம் இருந்து விளக்கி வைத்து இருக்கிறது. நமக்கு காந்தி எல்லாம் துறந்த துறவி போல தெரிவதால் நம்மை விட்டு அவர் விலகி இருக்கிறார். அவர் செய்யும் விஷயங்கள் நாம் பின்பற்றும் பொறுமை நம்மிடம் இல்லை. நமது சினிமாவில் வரும் ஹீரோ கூட பொறுமையாகவும் காந்தி போல இல்லை. அடித்தால் திருப்பி அடிக்கும் ஹீரோ தான் நமக்கு பிடிக்கும், உண்ணாவிரதம் இருப்பவரை நாம் பையித்தியம் என்று கருதும் காலம் இது இன்று உண்ணாவிரதம் இருக்கும் கட்சிகள் இதை எவ்வளவு மலிவுப் படுத்தமுடியோமோ அவ்வளவும் செய்து விட்டார்கள். உண்ணாவிரதம் என்றால் ஸ்கூல் போல உணவு இடைவேளை விட்டு சமோசா பிரியாணி என்று சாப்பிடும் காலம் இது.

காந்தி நமக்கு வில்லனா ?

முதலில் காந்தி இந்து மதத்தை மிக உறுதியாக நம்பினாலும் அவர் 1908 எழுதிய புத்தகத்தில் எழுதிய 2 வரி ஆனால் 1908ல் இருந்து 12 வருடம் கழித்து தான் இந்திய அரசியலக்கு வருகிறார். இந்த புத்தகம் தென் ஆப்பிரிக்காவில் வெளியானது.

"இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டும் இருக்க வேண்டுமென்று ஹிந்துக்கள் கருதினால் அவர்கள் கனவு காண்பவர்கள் அவர்கள்."

அப்போதே காந்தி மதம் மேல் நம்பிக்கை இருந்தாலும் சமுக ஒற்றுமை பற்றி தான் எழுதயுள்ளார். இந்த (2018) ஆண்டு  பிஜேபி ஆட்சியில் பல பேர் பசுகாக கொள்ள பட்டார்கள் ஆனால் அன்றே காந்தி அந்த புத்தகத்தில்

"எனக்கு பசுவிடம் மதிப்புண்டு... ஒரு பசுவை காப்பாற்றும் பொருட்டு ஒரு முகமதியனுடன் போராடுவதா ? அவனை கொல்வதா ?"

இது 1908   யில் எழுதியது ஆனால் 2018 யில் அதே சூழ்நிலையுடன் தான் இந்தியா இருக்கிறது என்று சொல்லுவதற்கு நாம் தான் வெட்க்கபடவேண்டும் ஆனால் இப்படி சொன்ன காந்தி தான் நமக்கு வில்லனா ?

1924 ஆம் ஆண்டு ஹிந்துக்கள்க்கு முஸ்லிம்கள் இடையே மதக்கலவரம். அப்போது காந்தி முகமதுஅலி என்ற முஸ்லிம் நண்பரின் வீட்டியில் தான் உண்ணாவிரதம் இருந்தார். உணமியில் காந்தியை எதிர்த்தவர்கள் ஹிந்துக்கள் தான் அவர் மிகவும் ஹிந்து மத சமுக தலைவர்களால் கடுமையாக தொடர்ந்த பல காலமாக எதிர்த்து தாக்கபட்டு இருக்கிறார் .இன்றும் தக்கப்டுகிறார் என்பது தான் வேடிக்கை.

"திண்டாதார்களை தனிப்பட்ட பிரிவாக கருத நாங்கள் விரும்பவில்லை. தீண்டாமையை நினைப்பதை விட ஹிந்து மதமே அழியலாமென்று நான் விரும்பிகிறேன்" என்று தந்து தாழ்த்தப்பட்டோர் சார்பாக பேசுகிறார்.

காந்தி தந்து கொள்கையாக கொண்டு இருந்ததில் தீண்டாமையை எதிர்த்தார். அதை கொண்டு பல மேடைகளில் பேசுகிறார். 1934 யில்  ஒரிசாவில்

"ஒரு பிராமணர் மற்றவர்களைக் காட்டிலும் தாம் உயிர்வானவர் என்று கருதினால் அவர் பிராமணத் தன்மையே இழந்தவராகிறார்." என்று கூறுகிறார். காந்தி அரசியலை விட ஒற்றுமையே முக்கியம் என்று கருதி காங்கிரஸ் லில் இருந்து விலகி மக்கள் ஒற்றுமைக்காக பிறகு போராடுகிறார். இப்போது கூட காந்தி உங்களுக்கு வில்லனாக தெரிவாரா ? என்ற கேள்வி எனக்கு இருக்கிறது.

1947  ஏப்ரல் மதம் இந்திய முழுக்கப் பயணம் செய்துவிட்டு டெல்லி திரும்பிகிறார். அவர் பயணம் செய்தது ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி மக்களிடம் பேசுகிறார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னும் காந்தியின் போராட்டம் நிற்கவில்லை. டெல்லியில் காந்திக்கு இந்துக்களிடம் இருந்து எதிர்ப்பு வருகிறது காரணம் காந்தி ஒரு முஸ்லிம் ஆதரவாளர் என்று அப்போது காந்தி

"எனது கடமை என்று தோன்றுவதை செய்யாமல் தவிர்பர்வன் நான் அல்ல............. நான் பிராத்தனைக் கூட்டம் நடத்துவதை எதிர்ப்பவர்களை  கூட்டத்திற்க்கு வர வேண்டாம்மென்று கேட்டுகொள்கிறேன். அப்படியே வந்தாலும் அவர்கள் மட்டும் வந்து விரும்பினால் என்னைக் கொன்றுவிடட்டும். நான் கொல்லப்பட்டாலும் கூட ராமா, ரகீம் என்ற பெயர்களை அடிக்கடி உச்சரிப்பதை நான் விடமாட்டேன். எனக்கு அவ்விரண்டும் ஓரே கடவுளின் பெயர் தான். இந்தப் பெயர்களை உச்ச்சரித்துக் கொண்டே  நான் சந்தோஷமாக இறப்பேன்."
என்று கூறுகிறார். தான் ஹிந்துக்களால் கொல்லபடலாம் என்று முன்பே கணித்து இருக்கிறார்.

காந்தி ஒற்றுமையை பற்றி பேசி வந்தாலும் பாகிஸ்தான் பிரிவதை நேரு பட்டேல் ஆகிய இருவராலும் தடுக்க முடியவில்லை. காந்தி பிரிக்கபட்டபோது பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் டெல்லிக்கு வருகிறபோதும் பல பேர் இறப்பதை பார்க்கும்போதும் மிகவும் வருந்துகிறார். அதை அவர் வெளிபடுத்தியும் இருக்கிறார்.

ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் இந்தியா ஹிந்துஸ்தான் என்றும் ஹிந்துத்துவா கொள்கை கொண்டு பரப்பியவர்கள் 18ம் நூற்றாண்டு முதல் ஆரம்பம் ஆகிவிட்டது. இதை வளர்த்தவர்கள்  ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், அரவிந்தர், பாலகங்காதர திலகர், சாவர்க்கர், ஹெட்கேவர், கோல்வாக்கர். கோட்சே என்று லிஸ்ட் நிண்டு கொண்டே போகிறது. இதில் உள்ள பல பேர் சிலரை தவிர காந்தியை கடுமையாக விமர்சித்து பேசி வந்து உள்ளனர். இன்று இந்தியாவில் மத கலவரம் நடப்பதற்கு இவர்களின் பங்கு அதிகம் என்று இப்போது புரிகிறது, இந்த மத உணர்வு ஒரு நாளில் உருவாக்க படுபவை இல்லை. கொஞ்சும் கொஞ்சமாக சேர்ந்து வெடித்து கொண்டு இருக்கிறது.

காந்தியை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள அவர் மீது உங்களுக்கு உள்ள விமர்சனம் என்று எதுவாக இருந்தாலும் புரிந்து கொள்ள காந்தியார் சாந்தியடைய புத்தகம் ஒரு புதிய தெளிவு உண்டாக்கும். மறக்காமல் படிக்கவும்.



                                               நாம் விமர்சனம் வைப்பது வேறு ஆனால் களத்தில் நின்று போராடி பார்த்தல் தான் தெரியும் அதன் உண்மை பக்கங்கள் வெறு என்றும். வாயால் பேசி காந்தியை கொள்ளமல் அவரை புரிந்து கொண்டு ஒரு மனிதற்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுத்து அவர் கருத்துகளை மட்டும் விமர்சிக்கலாம்.  காந்தி அனைத்தும் துறந்து ஒரு சன்யாசி போல வாழ்ந்தார் ஆனால் அவரை தீவரவாதி போல கொன்றுவிட்டனர். இதை ஒரு வேலை நேதாஜி கேட்டு இருந்தால் கூட அழுது புலம்பி இருப்பார். ஆனால் நாம் அவரை வசைச்சொல் வைத்து பேசவே கற்றுக்கொண்டு இருக்கிறோம்.

காந்தி நினைத்து இருந்தால் அவர் வேறு விதமாக தன்னை முன் நிறுத்தி மக்களை செலுத்தி இருக்கலாம் ஆனால் மக்கள் நலுனுக்காக போராட மட்டுமே அவர் செய்தார். நீங்கள் காந்தி திட்டுவது பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் அது யாருக்கு சந்தோசம் தரும் யாருக்கு சிலை வைத்து கும்பிட வழி செய்யும் என்று எண்ணி பார்த்தாவது பேசலாம். இது காந்தியை நீங்கள் குறைத்து பேசுவதால் அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று மதத்தை சாதியை தூக்கிபிடிக்க உதவி செய்கிறார்கள் தவிர வேறொன்றும் இல்லை .

காந்தியின் பொன்மொழி
               
                                                       "முதலில் உங்களை உதாசீனபடுத்துவார்கள், பின்னர் உங்களை பார்த்து நகைப்பார்கள், பின்னர் உங்களோடு சண்டையிடுவார்கள். பின்னர் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள்" என்று காந்தியின் ஒரு பொன்மொழி உள்ளது ஆம் காந்தி வெற்றி பெற்றார் தான் ஆனால் அவர்களால் அதை பொறுத்து கொள்ள முடியவில்லை ஹிந்துத்துவா போல போலி சன்யாசிகள் போல காந்தி மக்களை ஏமாற்றாமல் இருந்தார். அதனால் தான் பெரியார் ஹிந்து மதத்தை - காந்தி மதம் என்று மாற்ற வேண்டும்  என்று சொன்னார் அப்படி செய்தால் மதத்தில் சாதி மத வெறிகளை குறைக்கலாம் என்று காந்தி சொன்ன "ஹிந்து மதம்" வேறு என்று புரிகிறது. அது சாத்தியமா இல்லையா என்பது கேள்வியாக இருக்கலாம் ஆனால் இப்போது உள்ள மத, சாதிய கொடுமைகளை குறைத்து இருக்கலாம் என்று தொன்றுக்கிறது.

இப்படி இந்த புத்தக்கத்தில் பல்வேறு விஷயங்கள் காந்தியை பற்றி ஆதரமாக மற்றும் ஒரு புரிய பார்வை நமக்கு  கொடுக்கிறது.

புத்தகம்- காந்தியார் சாந்தியடைய 
ஆசிரியர்- ப. திருமாவேலன்
பதிப்பகம்- பரிசல் பதிப்பகம்
விலை- 160


- கு. செந்தில்குமார்
16-04-2018


Comments

Post a Comment