What is Love ? - காதல் என்றால் என்ன ?
Clicked by Sathis Ragavendran |
காதல் என்றால் என்ன ? இந்த கேள்விக்கு பல பதில்கள் உண்டு. உண்மையாக நாம் எந்த ஒரு profit அதாவது லாபமே இல்லாமல் ஒரு காதல் சிறு வயதில் வருவது தான். அதன் பின் வரும் காதல்கள் எல்லாமே உடல், முக அழகு, பணம் , சாதி , மதம் , மொழி, குடும்பம் என்று எதோ ஒரு காரணத்தோடு வரும் காதல்கள் தான். ஆயுத எழுத்து படத்தில் "நெஞ்சம் எல்லாம் காதல்" பாடலுக்கு மூன் ஒரு சீன். அந்த சீன்-ல சூர்யாவும் அவரது காதலியும் (இஷா டியால்) பைக்கில் போகும் காட்சியில் சுஜாதா ஒரு வசனம் வைத்து இருப்பார். அதில் காதல் என்பது "Divine" என்று காதலி வருணிக்க அதை சூர்யா மறுத்து காதல் என்று ஒன்று இல்லவே இல்லை "It Doesn't exist" என்று அந்த வசனம் வரும், மேலும் காதலில் வரும் கவிதை, ஓவியம், பாடல் போன்ற விஷயம் எல்லாமே கட்டிலில் முடிய தான், மத்தப்படி ஒன்றும் இல்லை என்று வசனம் முடிய அந்த பாடல் ஆரம்பிக்கும். படத்தில் வரும் காதல் என்பது கொஞ்சும் ஓவர் Romanticized தான். நாம் நினைக்கும் காதல் நிஜவாழ்கையில் வேறு விதமாக நம்மை தாக்கலாம். நல்ல புரிதல், தனிப்பட்ட விருப்பங்களில் விடுதலை, ஒருவரையொருவர் அடிமை செய்யாமல் இருந்தால் காதல் மேலும் மேலும் மலரும் என்பதில் ஐயம் இல்லை. பெரியாரின் இந்த பார்வை இந்த காலத்துக்கும் பொருந்தும் அதைவிட மிகவும் தேவைபடுகிறது என்பதே உண்மை. தமிழில் படிக்க கிழே ஸ்க்ரோல் செய்யவும்.
This essay is meant to reveal that there is nothing as ‘love’ between a man and a woman but only a liking a desire an attraction of the one for the other. The word `love’ has been coined with extraordinary and unnatural attributes to spoil a coordinating life between a man and a woman. In the name of love many are leading an unhappy, ungratifying and unbearable life. My aim is to blow up the myth about love.
What is love? What is its power? How does it begin and how long does it exist? When does it blossom and when does it wither? what is the reason for its disappearance? These are some of the questions for which if we try to find answers we will see the hollowness of the word “love” and the folly of the humans in praising it sky-high.
First of all it is better to understand the meaning of the word ‘love’, its usage and the base on which it is founded. Those who talk of love at present say that it is not affection, affinity, longing, dotage or lust but something unique that develops between a man and a woman in an inexplicable way for a specific purpose. They say love is divinely and nothing else could match it. They further say that love blossoms between a man and a woman only once and it remains unchangeable thereafter. According to them if love shifts from one person to another it is not love at all but lust and it is to be branded as “ “whoring”. They believe that true love is fixed and one who loves truly would never think of another with desire,longing or dotage. In the name of love they bind one to another irretrievably.
Whatever be the consequences, I am of the opinion that the champions of love are either ignorant of the reality of life and human nature or feign ignorance for some reason or other.
Most of the couples we see nowadays are brought together by a third party to beget children, to make their domestic life pleasant and to gratify their natural instincts.It is very rare to find a couple who boast of being brought together by love-god Cupid or of having fallen in love impelled by some divine power. Whatever be the reason for their coming together, I dare say that no one has any right to decide, intervene or influence one’s love, lust, desire, affection, affinity, infatuation, yearning, dotage etc. for others. To be frank, I would rather say that nature, experience and human rights vouchsafe that choosing a life-partner is an individual’s privilege as that of his choosing a restaurant or cafeteria to cater to his taste desire or gratification and the interference of a third person is obtrusive and unwarranted.
If we probe into the nature of the word ‘love’ denuded of its paraphernalia, we will find nothing special about it. Whatever may be the language in which the word occurs, it is nothing but a word like `desire’, `affection’,` attraction’ etc that denotes a link between a man and a woman, If we look up the word in a dictionary, its sanskrit root connotes cutting, killing, breaking etc. In Tamil the word refers to sexual gravitation; otherwise it is a synonym with affection, desire, friendship. affinity, etc. There seems to be nothing special about it. If people attribute any special meaning to this word I do not know on what authority or usage they arrive at such a special meaning.
Next let us ask how love evolves between a man and a woman. Does it blossom on its own without any external promptings or does a third person facilitates its origin? If they say it blossoms involuntarily, we have to probe the place and time of its origin.Then we will find that love does not spring from nowhere but only when a man and woman come together or each knows the other’s appearance, character, traits etc through a third person or other sources.
Again there is the possibility of love being one-sided and not reciprocated. I find love to be similar to the desire of a man to possess something he looks at, hears of or comes to know of. The mentality of the lovers makes it clear that their love is self-motivated and seeks gratification in each possessing the other.
Love may be prompted by one’s beauty, youth, intelligence, wealth, education, status, family prestige, or talent in music which is worth possession, enjoyment and gratification. Each loves the other for some trait or other which he or she really finds in the other or presumes or believes to be being misled by appearances.
Let us imagine that a man and a woman meet each other in a garden. Each looks at the other and gets gravitated . The man asks her who she is. She says she is a princess and the man falls in love with her instantly. Now, the princess, in her turn, asks him who he is. He answers that he is the son of a servant in her palace. What will be her reaction? Naturally she will feel disgusted and disgraced. Here what prompted them to love each other? Suppose the man tells her that he is the son of a neighbouring king. How would she react? She would fall headlong in love with him and wish he should continue to be her husband in all her births to come. Suppose she comes to know, after a few days, that her lover is not a prince but the son of a slave. Will her love continue as before or vanish? Suppose one falls in love with a girl presuming her to be all right but later comes to know that she is diseased or that she is a prostitute or that she is a schemer to possess his wealth or that she is contrary to his expectations. Will his love for her remain unaltered? Such questioning will reveal the hollowness of the word ‘love’ and its paraphernalia. Does true love spring up at first sight or does it evolve gradually by knowing each other intimately? Of these two types of love which can be superior? Can we say that Platonic love is superior to physical love? Can true love remain unperturbed even where incompatibility creeps in physically or mentally? Is true love immune to infidelity which is suspected or real? Can love become false if one gets away from the other egged on by suspicion or dissatisfaction?
While falling in love, the lovers might have been at a different level of physical and mental maturity, personal views and aspirations of life but later on changes might occur in their outlook. It we insist that their love should remain constant throughout their lives even in adverse circumstances, love becomes useless and loses its value.
Suppose a couple of lovers get separated from each other in disgust and eventually turn ascetics, shall we call them betrayers of love? Will there be any meaning in their love? Or if one becomes an ascetic and forsakes the other, shall we call it a betrayal of love? Such questions will divulge the hollowness of the word “love”. It is but natural that one’s love flows in diverse ways and one desires to possess many things in life. More often than not man gets dejected with his dear ones, detests them and even gets separated from them. Is it not but natural that one yields to urges at weaker moments and rebounds after sometime? Don’t we see that one gets subjugated as a novice but tries to get liberated after gaining some knowledge of the world?
We see many a young man falling a prey to a courtesan and losing his all for her sake. Shall we call his infatuation for the courtesan love, lust, or loss of senses? At times we find a courtesan hates her profession and decides to live with a man for the rest of her life-time. Does it reveal the courtesan’s love for the man or her preference for a secure life? Without knowing the intention of the courtesan if the man continues to love her, can we call his a true love?
The answers to these questions eventually lead us to the conclusion that love is in no way different form one’s liking, desire, infatuation, lust, craving or inexperience, idiocy, disappointment and deception.
People heap unnecessary and unwanted kudos on love and poison the minds of young men and women who ruin their own lives feigning false sentiments. They resemble those who pose themselves as true devotees, apply ash to their foreheads, go to temples regularly, sing devotional songs fervently, and utter the names of deities as “ Shiv!” or “Ram!”. They are like playful children, who pretend to be asleep and toss their toes if you mention that sleeping children will do so. They are like the women who hear that chaste women always walk with their eyes downcast instantly adopt that gait. Lovers taught the illusory traits of love blindly follow them and try to live like imaginary lovers.
From what we have discussed so far it becomes clear that love is not something unique or different from our day to-day desire, affection, liking, etc. I opine that the so called love starts when two persons come into contact with each other and exchange their views, thoughts needs and desires. These personal traits, needs and desires are not fixed ones. They are bound to change in course of time. So are the changeability of love, affection, attraction, etc. I am not against love while viewed as affection, desire, and a friendly disposition. Love, affection, desire, friendship, etc, are for one’s happiness and gratification and where there is no happiness and gratification it is imposture to pose oneself as a true lover. I have written all this to prevent those who, irresponsibly interfere in the personal happiness and gratification of others by admonishing utterings like “Yours is not love” “It is against love”, “ Yours is lust” “Your love is equivalent to prostitution” etc and make life a hell in the name of the deceptive word “LOVE”
Written by Periyar E.V. Ramasamy, Published in "Kudi Arasu" . 18.01.1931.
அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர வேறு ஒரு பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமை யாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அநாவசியமாய் ஆண் பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல் தொல்லைபடுத்தப்பட்டு வரப்படு கின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.
ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங் களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவை கள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படி பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள். “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு நேசம் ஆசை காமம், மோகம் என்பவை வேறு, காதல் வேறு “நடப்பு வேறு” என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும். அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும். “அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும்,
“அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்; அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒருகாலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும் பிறகு வேறு ஒருவர் இடமும் அந்தக் காதல் ஏற்படாது.
“அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விப சாரம் என்று தான் சொல்லவேண்டுமே யொழிய அது ஒருக்காலும் காதலா காது” என்றும்,
“ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது” என்று சொல்லப்படு கின்றது.
மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படு கின்றது.
ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனு போகமும் மக்களின் அனுபவஞானமும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கையையும், உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டு மென்றோ மறைக்கின்றவர்கள் என்றேதான் கருதவேண்டி இருக்கின்றது.
அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவை களைப்பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாரா வதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்பந்திப் பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கை யையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்ட லில் சாப்பிடுவதுபோலவும், தனக்குப்பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவே சிப்பது அதிகப் பிரசங்கித்தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவ துமாகுமென்றும் சொல்ல வேண்டும்.
இப்படிச் சொல்லப்படுவது கூட இவ்வளவு பெருமையையும் அணி யையும் அலங்காரத்தையும் கொடுத்து பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகின்றது? என்பதை யோசித்துப்பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறுபொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதின் வேறு விதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.
அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத்தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள்தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றபடி தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் பெண் சேர்க்கை-கூட்டு முதலாகியவை சம்மந்தமான விஷயங்களுக்கும், அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்க ளையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.
ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அருத்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள் என்பதும் நமக்கு விளங்கவில்லை.
நிற்க இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? இது தானாகவே உண்டாகின்றதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத் தின்மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண் ணையோ தானே நேரில் பார்த்தாலும், அல்லது தான் மூன்றாவது மனிதர் களால் கேள்விப்படுவதாலும், உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறுவழியில் பார்க்கக் கேட்க நேரிடுவதாலுமேதான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும்கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் - வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கி றானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப் படவில்லை.
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை - திருப்தியைக் கோரத்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும் காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தை கவனித்தால் விளங்கா மல் போகாது.
அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமை யைக் கொண்டோ, தனது போகபோக்கியத்திற்கு பயன்படுவதைக்கொண் டோ, அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவை யான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டே தான் யாரும் எந்தப் பெண் ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ளமுடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத் துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் அல்லது வேஷமாத்திரத்தில் காட்டப் பட்டதாக இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்து வதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க் கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?
நிற்க, அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறு ஜென்மத்திலும்” இவனை விட்டுப் பிரியக் கூடாது என்று கருதி விடுகிறாள். 4-நாள் பொருத்தபின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும், சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாகவேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும். இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும், திருப்திக்கும், இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க் காத கெட்டகாரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக் காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய் தெரிந்து கொள்ளா மல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளை கவனிக்கும்போது சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மை யாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாறமுடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தி யுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவ னிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக்காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகரமுடியும்.
காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப்பான்மை, பக்குவம், லக்ஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லக்ஷியம் மாறலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொண்டு சதா அதிர்ப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியதுதானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாத தையும் அது பயன்படாததையும் காணலாம்.
Clicked by Vinoth Chandar |
ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துரவிகளாய் விட்டார்களானால் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோதமில்லையானால் ஒருவர் ஞானியாகி துரவியாகி விட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படு வதும் ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அதுபோலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக்கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பெலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்டபின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப் பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?.
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களை யெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சிலசமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு சௌகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக்கொண்டே வந்தால் இது ஒத்தக் காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கி விடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்று கருதி, எப்படி பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அனேகர் தங்களை பக்திவான்கள் என்று பிறர் சொல்லவேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும், பட்டை நாமம் போடுவதும் , சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவசிவ என்று சொல்லிக்கொண்டிருப்பது மான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக்கொள்ளுகின்றார் களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேஷம் போட்டு கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக “தூங்கினால் கால் ஆடுமே” என்று சொன் னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்கவேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள் ளுகின்றார்களோ அதுபோலும் உண்மையான காதல்களானால் இப்படி இருப் பார்களே என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அதுபோலவே நடந்து காதலர்கள் என்பவர் களும் தங்கள் காதலைக் காட்டிக்கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தை யெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்.
ஆகவே ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃரிணைப்பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வே றில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கை யும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும், மாற கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலி ருந்து நாம் யாரிடமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக் கொண்ட காதல்கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.
ஆனால் அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் “இது காதலல்ல” “அது காதலுக்கு விரோதம்” “அது காம இச்சை” “இது மிருக இச்சை” என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவித பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர் கள் கூற்றை யும் கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம்.
-- தந்தைபெரியார் - “குடி அரசு ”- தலையங்கம் - 18.01.1931.
This comment has been removed by the author.
ReplyDeleteMobile service centre in Ritchie street
ReplyDeletehttps://mobilerepairshop.co.in