பிரபு காளிதாஸ் முதல் சிறுக்கதை குங்குமம் இந்த வார இதழ் வெளிவந்தது. “அந்த பொறுக்கிப் பசங்களோட சேர்றத எப்ப நிப்பாட்டுறியோ அன்னிக்கிதான்டா நாம ஒரு வேளையாவது சாப்ட முடியும். உங்கப்பன் குடிச்சே செத்தான். நீ பள்ளிக்கூடம் போவுறதயும் நிறுத்திட்டே. எங்கனயாவது வேலைக்கிப் போயி நாலு காசு கொண்டு வந்து குடுத்து பாப்பாவையாவது படிக்க வெச்சி கரை சேர்க்கலாம்னு பாத்தா... நீ தெனம் அந்த நாய்ங்க பின்னாடியே சுத்தறே. ஏதாவது உருப்புடியாப் பண்றா...” காலையிலேயே குணாவின் அம்மா ஆரம்பித்து விட்டாள். கயிற்றுக் கட்டிலிலிருந்து பொறுமையாய் எழுந்து உட்கார யத்தனித்தபோது அவன் பின்னந்தலையில் நொங்கென்று ஒரு வெளிர் மஞ்சள் பிளாஸ்டிக் குடம் பட்டு உருண்டு ஓடியது. அவன் திரும்பவேயில்லை. நிச்சயம் அவன் தங்கை வேணிதான். ஸ்கூல் கிளம்புவதற்கு முன் அவள் இந்தச் செய்கையை தினம் செய்துவிட்டுத்தான் கிளம்புவாள். ஆற்றிலிருந்து இருபது குடம் தண்ணீர் தூக்கி வந்து தொட்டியை நிரப்ப வேண்டும். அம்மா வீட்டு வேலை பார்க்கக் கிளம்பி விடுவாள். இருபது குடங்களில் ஐந்தாவது குடம் தூக்கித் தொட்டியை நிரப்புவதற்குள் பொறுக்கிகள...