ஏன் பெரியார் என்ற பெயர் உங்களுக்கு உறுத்துகிறது ? - The Dravidian Rebel
                                                                                                                                                                                                               பெரியார் என்றால் எனக்குள் எப்போதும் ஒரு கர்வம் வருவது உண்டு காரணம் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் இருந்த நேரத்தில் அவர் செய்த விஷயங்கள் ஒரு போராட்டமாக இருந்து இருக்கும் அது நாம் கற்பனை செய்வது போல எளிமையாக இருந்து இருக்காது. எனக்கு முதன் முதலில் பெரியார் என்ற பெயர் எப்போது கேள்விப்பட்டேன் என்று சரியாக தெரியவில்லை. கண்டிப்பாக என் பள்ளியிலும் வீட்டிலும் கிடையாது. எனக்குச் சிறுவயதில் பெரியார் என்றால் கடவுள் எதிர்ப்பாளர் திமுக காரர் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் எப்போது ஒரு நாள் தினத்தந்தி நாளிதழில் சிறுவர்-காக பக்கம் வரும் அதில் பெரியார் பற்றி ஒரு செய்தி வந்து இருந்தது. அது அனைவரும் கேள்விப்பட்டு இருக்கும் கதை தான். பெரியார் மாட்டுவண்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அவர் மீது செருப்பு வீசப்பட்டது சிறிது தூரம் சென்றபிறகு வண்டியைச் செருப்பு வீசப்பட்ட இடத்துக்குத் திருப்ப சொன்னார். ஏன் என்றால் ஒரு செருப்பு வீசியவன் இன்னூறுசெருப்பு அங்கே போட்டு போயிருப்பன என்று. இதை இப்போது படிக்கும்போது பெரிய ஹீரோ லெவல் சீன் இல்லைஎன்றாலும் அவருடைய தன்மை பிடித்து இருக்கிறது. அதன் பிறகு அவருக்குச் செருப்பு வீசப்பட்ட இடங்களில் எல்லாம்அவரை வைத்தே திமுக தமிழகத்தில் சிலை வைத்தார்கள் என்பது வரலாறு..

அவர் ஒரு கடவுள் எதிர்ப்பாளர் மட்டும் தானா என்றால் இல்லை அவர் காலத்தில் பெண்களுக்காக ஆங்கிலத்தில் கூட அவர் அளவுக்குப் பெண்களுக்காக பேசிய கருத்துகள் இல்லை. ஆதாவது பெரியார் பெண்கள் அதிக குழந்தைகள் பெறுவதைக் குறைத்து கொள்ளத் தொடர்ந்து எழுதி உள்ளார். இதைப் பற்றி அவர் தனது குடியரசு நாளிதழில் 1930ல் இருந்து எழுதி உள்ளார். ஆனாலும் உலக வியந்து பேசும் பெண்ணியம் கருத்துகள் எல்லாம் 1940ஸ் தான் புத்தகமாக வருகிறது. முக்கியமாக செகண்ட் செக்ஸ் (Second sex) என்ற புகழ்பெற்ற பெண்ணியம் புத்தகம் 1949ல் தான் வந்தது. இப்படி பெண்ணியம் பேசியவரை இந்த ஆண்கள் சூழும் உலகில் உறுத்துவரா இல்லையா ? கண்டிப்பாக எங்கு எல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கு எல்லாம் பெண்கள் பெரியாராகவே மாறி உறுத்துவார்கள்.

             பெரியாரின் கொள்கை தான் என்ன என்று முதலில் புரிந்து கொண்டு சொல்ல வேண்டும். அவரின் கொள்கை ஒன்று தான். சுயமரியாதை (self-Respect), இதில் தான் கடவுள் எதிர்ப்பு, பெண்ணியம், அறிவியல் பார்வை எல்லாம் வருகிறது. கடவுள் என்கிற பாதையில் மதம் என்கிற பிரிவுகள் இருக்கிறது. இந்த மத பிரிவுகளில் சாதி என்கிற குறுக்கு சந்து அதிகமாக இருக்கிறது. எல்லாம் சேரும் இடம் கடவுள் என்கிற இடம் தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சாதி சண்டைக்கு யார் காரணம் மதத்தில் உள்ள வேதம், வேதம் யார் எழுதியது என்று கேட்டால் கடவுள் வருகிறார்.. உடனே பெரியார் நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா!! என்ற ரீதியில் சாதி இல்லை, மதமும் இல்லை கடவுள் இல்லை என்று சொன்னார். இப்போது யாருக்குப் பெரியார் உறுத்துவார் என்று யோசித்துப் பார்த்தால் புரியும், அவர்கள் மத, சாதி வெறியர்களுக்கு மட்டுமே!

தமிழ் தேசியவாதிகள் ஏன் பெரியார் உறுத்துகிறார் ?

                             தமிழ்த் தேசியம் என்றாலே அது திராவிடம் கிழ தான் வரும். முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் பெரியார் சொன்னதிராவிடம் வேறு., அறிஞர்கள் சொன்ன திராவிடம் வேறு. அறிஞர்கள் சொன்ன திராவிடம் என்பது மொழி இனம் சார்ந்தது. பெரியார் கேட்ட திராவிடநாடுக்கு புவியியல் எல்லாம் வகுக்கவில்லை ( He didn't ask Dravidanadu with constrained borders). அவர் கேட்ட திராவிடநாடு என்பது பிராமணர் இல்லாத ஒரு நாடு அவர் பிராமணரை ஒதுக்க வேண்டும் என்று இல்லை. அப்போது இருந்த நிலைக்கு அவர் அப்போது அப்படி சொல்லிக்கிறார். இன்னும் ஒருபடி மேல் போய் இந்த உலகத்தில் யார் ஒடுக்கப்பட்டலும் அவரும் திராவிடர் தான் என்று ஒரு அர்த்தம் சொல்லுகிறார் இதில் இருந்து புரிவது என்ன ? பெரியார் ஒருமனித நேயம் மிக்க ஒரு சூப்பர் ஹீரோ! அவர் எப்போதும் வில்லன்களுக்கு உறுத்துளாகவே இருப்பார்.

                      தமிழ்தேசியம் என்பது பிள்ளை என்றால் திராவிடம் என்பது தாய் என்று புரிந்துகொள்ள வேண்டும். பெரியார் இவர்களுக்கு வில்லன் ஏன் ஆனர் என்றால், இந்த இடைநிலை ஜாதி இருக்கு-ல (BC CASTES) அவர்களின் பெருமை எல்லாம் இந்த ஜாதிஒழிப்பில் அடிவாங்குகிறது. தேவர், கொங்கு நாடு உள்ள ஜாதிகள் எல்லாம் பதிக்கப்படும். அவர்களால் ஜாதி பெருமை பேசமுடியவில்லை. கீழ் சாதிகாரன் எல்லாம் சமமாக பேசுகிறான்.

              இதற்கு இவர்கள் பெரியார் கருத்துகளைப் பிராமணர் உடன் கூட்டணி வைத்துக் கொண்டு திரித்துக் கூறுகிறார்கள். பெரியார் தமிழ்மொழியை இழிவுப்படுத்தினார் என்று ஒரு கதை உண்டு. பெரியார் தமிழ் மொழியில் கடவுளை பற்றியே பாடல்கள் கதைகள் உள்ளன. வேதத்தைச் சாதியை புகழுந்து இருக்கிறது ஆங்கிலத்தில் உள்ளது போல அறிவியல் விஷயங்கள் இல்லை என்று தமிழ்மொழியை அவர் குற்றம் சாற்றியுள்ளார் மற்றபடி அவர் தமிழ் மொழியை வேறு இதவும் சொல்லவில்லை. இப்போது ஏன் பெரியார் இவர்களுக்கு உறுத்துகிறார் என்று தெரிந்து இருக்கும். இப்போது மட்டும் இல்லை எப்போதும் உறுத்துவார்.

                                                                    பெரியார் என்றாலே ஒரு காலத்தில் ஒரு சிலருக்கு உறுத்துளாகவே இருந்தார் ஆனால் இப்போது அது அரசியல் ஆசை தனிப்பட்ட சாதி வளர்ச்சிக்காக அவர் சொன்ன கருத்துகளைத் திரித்து கூறி தங்கள் கூட்டத்தின் இளைஞர்களை மண்டையில் மொட்டை அடித்து சந்தனம் தடவி உக்கார வைத்து இருக்கிறார்கள். அதில் சில தமிழ் தேசியவாதிகளும் அடங்குவார்கள். இவர்களுக்குப் பெரியார் பற்றிய கருத்துக்கள் திரித்துக் கூறி அதை வைத்து வாழ்த்து கொண்டு இருக்கிறார்கள் இதற்கு இவர்கள் ஒரு கிளாஸ் மூத்திரம் வாங்கிக் குடிக்கலாம்.. பெரியார் கருத்துகளை மறுப்பது வேறு ஆனால் திரித்து வேறு மாறிக் கூறுவது வேறு.

                                                 
விகடன் ஓவியம் -ம.செ

                                                             சில தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் உறுத்துகிறார். இதில் தான் சாதி அரசியல் இருக்கிறது. பாரி சாலன் போன்ற போலி தேசியவாதிகள் எச். ராஜா போல தேவர் சாதி மக்களைப் பெருமை படுத்திப் பேசி பெரியாரை இல்லுமுநாட்டி என்று கூறுவது எதற்காக என்று புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் மற்றும் அதிக மக்களைக் கொண்ட தேவர் சாதி மக்களை தங்கள் பக்கம் இழுக்க இந்தச் சதி. இதற்கு தேவர் சாதி மக்களின் பெருமைகளை பாடுவார்கள். தேவர் சமுகம் மக்களை திரும்பவும் குற்றப்பரம்பரை ஆக்குவதே இவர்களின் வேலை. எல்லா மதத்தையும் விமர்சித்தவர் பெரியார் அவர் வெறும் இந்து மதத்தை மட்டும் விமர்சித்தார் என்பது தவறு. இதற்கு நாம் அவர் புத்தகத்தை படித்தால் தான் தெரியுமே தவிர வேறு வழி இல்லை.

             தமிழ்நாட்டில் மட்டும் தான் திராவிட அரசியல் வந்த பின் இந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்று நிகழ்ந்தது. அண்ணாதுரை , கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஜாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்தியாவில் வேறு எங்கும் இப்படி இல்லை. இதுவே சாதி ஒழிப்பின் ஒரு சாதனை தானே. இது யாருக்கு உறுத்தும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.பெரியார் விகடனில் 4.4.1965 யில் ஒரு பேட்டியில் இப்படி கூறுகிறார் ..

கேள்வி: ''சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?'' 


பெரியார் பதில்: இவ்வாறு நான் கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.
''வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!'' -
உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன.
''அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. அந்த மோர், அந்தத் தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?'' - சிரிக்கிறார் பெரியார். 

எங்கு எல்லாம் மக்கள் ஓடுக்கபடுகிறார்கள் என்றாலும் அவர்களின் குரலாக பெரியாரின் குரல் இருக்கும். அவர்கள் எல்லோரும் திராவிடர்கள்தான்.. இதை மறுப்பவர்கள் கண்டிப்பாக ஜாதி மதம் என்று எதோ ஒன்றில் மாட்டிக் கொண்டு நம்மை மூளை சலவை செய்வார்கள். 

வெள்ளை வண்ணம் தவிர எந்த ஒரு வண்ணத்தை( COLOR) அடித்தாலும் முதலில் அதன் வண்ணத்தின் சாயலாக தான் இருக்கும் பிறகு அதன் அடர்த்தி அதிகமாகக் கருப்பாக மாறும் என்பது அறிவியல். அதுபோல மதம் சாதி கலவரம் அதிகமாகக் கருப்பு என்கிற திராவிட பெரியாரிஸ்ம் என்பது முளைக்கும் மேலும் வளரும்..

யாருல்லாம் ஜாதி மதம் கடவுள் பாலினம் போன்றவற்றை வைத்து கொண்டு அரசியல் ,பணம் செய்வார்களோ அவர்களுக்கு எப்போது பெரியார் சிலை மட்டுமல்ல பெரியார் என்ற வார்த்தை கூட உறுத்தலாகவே இருக்கும். பெரியார் இன்றும் தனது கருத்துகள் முலம் அவர்களுக்கு கூறும் ஒரு செய்தி "செஞ்சுருவேன்!". இன்று மட்டுமல்ல எப்போதும் அவர்களை செஞ்சுகொண்டே இருக்கிறார்! (இருப்பார்!)


நன்றி
செந்தில்குமார். கு 

Comments

Post a Comment