திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? - What DMK has done in Social Justice so far ?


69% இடஒதுக்கீடை உறுதி செய்த மணடல் கமிஷன் அறிக்கையை பிரதமர் வி.பி.சிங் கலைஞர் இருவரும் வெளியிட்ட போது

                                 திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? என்ற கேள்வி எப்போதும் எழுப்ப படுகிறது. காரணம் திமுக ஆட்சியில் அவர்கள் செய்ததை முதல் பக்கம் நாளிதளில் விளம்பரம் செய்யவில்லை. அதை பற்றி திமுக வும் கவலை படவில்லை. இன்று விளம்பரம் ரொம்ப முக்கியம் பாஸ் என்று இருந்தால் கூட திமுக இதற்க்கு இதுவரை என்ன செய்தது என்று தெரியவில்லை. இப்பொது தான் IT விங் வந்து உள்ளது பார்போம் அவர்களின் வேலை என்ன வென்று. ஆனால் திமுக சமூகநீதிக்காக நிறையவே செய்து உள்ளது. நாட்டியில் வேறு எந்த கட்சி இதை விட சரி அட்லீஸ்ட் வேறு என்ன நல்ல விஷயங்கள் செய்து உள்ளது என்று சொல்லலாம்.  திமுக போல வேறு எந்த கட்சியாவது வேறு மாநிலங்களில் என்ன செய்தது என்று பார்த்து சொல்வும். இப்பொது சொல்லபோவது இடஒதிக்கிடு சமந்தம் உள்ள விஷயங்கள் மட்டுமே இதை வைத்து இவ்வளுவு தானா என்று எடுத்து கொள்ள வேண்டாம் நிறைய இருக்கிறது. நான் திமுக கட்சிக்காரன் இல்லை, தொடர்ந்து திமுக மேல் வைக்கும் குற்றத்துக்கு பதில் மட்டுமே.

திமுக இடைநிலை சாதிகளை (BC caste) வளர்த்துவிட்டதா ? 


தமிழ்நாட்டின் சாதிவாரியான வரைப்படம்

                                          இதற்கு திமுக மட்டும் காரணம் இல்லை. அனைத்து கட்சிகளும் மற்றும் மக்களின் உணர்வும் அப்புடித்தான் இருந்தது. திமுக தனது ஆட்சியை நிலை நிறுத்த காங்கிரஸ் அதிமுக போன்ற கட்சிகளிடம் மோத சாதி அரசியலை பயன்படுத்த நிற்பந்திக்கபட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்தார்களா இல்லையா என்பது தான் கேள்வி ?

ஓட்டு அரசியல் என்பது இயக்க அரசியல் போல இருக்காது பல்வேறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டிய சூழ்நிலைகள் உள்ளது. ஒரு கட்சி சிறுபான்மை மக்களுக்கு திட்டங்கள் கொண்டு வந்தால் இடை நிலை சாதியிடம் ஓட்டை இழக்கும் இப்படி பட்ட தமிழ்நாட்டில் ஓட்டையும் வாங்கி சிறுபான்மையினருக்கு நல்லது செய்யவேண்டும் என்றால் கொஞ்சும் கஷ்டம் தான். திமுக ஆக சிறந்த கட்சி என்று சொல்ல வரவில்லை ஆனால் அவர்கள் செய்த நல்லதுக்கு நன்றியும் பாராட்டும் சொல்லமல் திட்ட மட்டும் செய்வது தான் பிரச்சனை அது ஓட்டு அரசியல் என்று வரும்போது மற்ற கட்சிகள் அதை மட்டும் ஊதி பெரிது ஆக்கி பரப்பிவிட்டு திமுகவின் ஓட்டை குறைத்து விட வழி செய்கிறது என்பதே உண்மை. இது தான் ஓட்டு அரசியலில் உள்ள பிர்ச்சன்னை.

சரி திமுக என்ன செய்தது சமூகநீதி நிலைநாட்ட ? சிறுபான்மை மக்களுக்கு திமுக என்ன செய்தது என்று ஒரு பட்டியல் எடுத்து  கிழே எழுதி உள்ளேன். இது பல தரப்பட்ட முகநூல் திமுக நண்பர்கள் போஸ்ட் செய்தது.

1. பிற்படுத்தப்பட்டோருக்கான நலவாரியம் அமைத்தது.

2. இடஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது.

3. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு.

4. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது.

5. மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது.

6. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது.

7. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது.

8. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச இளம்கலை பட்டப்படிப்பு.

9. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி.

10. இரண்டு பெண் மேயர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது.

11. கிராமப்புற மாணவர்களுக்கு தொழிற்முறை கல்வியில் 15% இடஒதுக்கீடு செய்தது.

12. சமச்சீர் கல்வி கொண்டு வந்தது.


13. ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூபாய் 5 கோடி அறவே தள்ளுபடி.

14. நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம்.


15. மண்டலகமிஷன் ஆதரவு.

16. 8 புதிய ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளிகள் - 3 புதிய பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகள்.


17. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மர பினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கான உணவுப்படி,
 மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர் களுக்கு ரூபாய் 400 லிருந்து ரூபாய் 450 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 500 லிருந்து ரூபாய் 550 ஆகவும் உயர்வு.


18. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான மாநில அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.50,000 லிருந்து ஒரு இலட்சமாக உயர்வு.


19. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சீர்மரபின மாணவர்களுக்கு 25 புதிய இல்லங்கள்- இவர்கள் தங்கி பயிலும் 25 இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள்.


20. சமத்துவபுரம்.

21. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்.
முதன்முதல்ல தமிழகத்தில் விதவை மறுமணத்துக்கு நிதிஉதவி செய்யும் சட்டம் அவர்தான் கொண்டு வந்தார். 

22.பெண்களுக்கு சொத்தில் உரிமை,‌ காவல்துறையில் முதலில் பெண்களை சேர்த்தது, உள்ளாட்சி அமைப்பில் 30% இடவொதுக்கீடு எல்லாம் அவரோட ஆட்சியில் தான் ஆரம்பிக்க ப்பட்டது.


23.மகளிர் சுய உதவிக்குழு அவர் ஆரம்பிச்சதுதான். இன்னைக்கு அது ரொம்ப வெற்றிகரமான திட்டம்.


24. முதல் பட்டதாரி மாணவனுக்கு இலவச உதவித்தொகை. 

25. பள்ளி கல்லுரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.

26.கிராமப் புறங்களில் இருக்கும் இயற்கை முறையில் பாரம்பரிய முறையில் சுளுக்கு, மாவுக்கட்டு எலும்பு முறிவுகள் வைத்தியம், போன்ற பதிவு செய்யப் படாத வைத்தியர்கள் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஒரு திட்டம் தீட்டினார் கலைஞர்(2009 அல்லது 2010) அது வெளியே தெரியாமலேயே இருக்கிறது.

27.குடிசைமாற்றுவாரியம்.

28.பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம்.


என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கான இடஒதிக்கீடு என்பது அவ்வளுவு ஈசியாக கிடைப்பது இல்லை. அதை பெறுவதற்கு ஓட்டு என்பதை எல்லாம் தாண்டி பல சாதி ரீதியாக உயர்ந்த பதவியில் உள்ள மனிதர்களிடம் இருந்து போராடி பெற வேண்டி உள்ளது என்பதை நினைத்து பேசலாம் என்பது என்னுடைய கருத்து.


கனிமொழி திரவிடத்தை பற்றி கருத்து.


                                          திமுக வுக்கு ஓட்டு போடுவது போடாதது உங்கள் தனிப்பட்ட விஷயம் ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்லி உங்கள் அறிவுத்திறமையை வெளிபடுத்த திமுகவை வைத்து விளையாட வேண்டாம். திமுக மக்களின் கட்சியாக தான் வந்தது என்பதை மறக்காமல் நாம் (மக்கள்) தான் அவர்களை பதவியில் உக்கரவைத்வர்கள் என்பதுயும் மறக்க வேண்டாம்.


- கு .செந்தில்குமார் 
15-04-2018

Comments

Post a Comment