Posts

What is Love ? - காதல் என்றால் என்ன ?

Image
Clicked by  Sathis Ragavendran                                                      காதல் என்றால் என்ன ? இந்த கேள்விக்கு பல பதில்கள் உண்டு. உண்மையாக நாம் எந்த ஒரு profit அதாவது லாபமே இல்லாமல் ஒரு காதல் சிறு வயதில் வருவது தான். அதன் பின் வரும் காதல்கள் எல்லாமே உடல், முக அழகு, பணம் , சாதி , மதம் , மொழி, குடும்பம் என்று எதோ ஒரு காரணத்தோடு வரும் காதல்கள் தான். ஆயுத எழுத்து படத்தில் " நெஞ்சம் எல்லாம் காதல்"  பாடலுக்கு மூன் ஒரு சீன். அந்த சீன்-ல சூர்யாவும் அவரது காதலியும் (இஷா டியால்) பைக்கில் போகும் காட்சியில் சுஜாதா ஒரு வசனம் வைத்து இருப்பார். அதில் காதல் என்பது "Divine" என்று காதலி வருணிக்க அதை சூர்யா மறுத்து காதல் என்று ஒன்று இல்லவே இல்லை "It Doesn't exist" என்று அந்த வசனம் வரும், மேலும் காதலில் வரும் கவிதை, ஓவியம், பாடல் போன்ற விஷயம் எல்லாமே கட்டிலில் முடிய தான், மத்தப்படி ஒன்றும் இல்லை என்று வசனம் முடிய அந்த பாடல் ஆரம்பிக்கும். பட...

காந்தி நமக்கு வில்லனா ? - காந்தியார் சாந்தியடைய

Image
புத்தகத்தின் அட்டை படம்                                                         மகாத்மா காந்தி இந்த உலகம் போற்றபடும் தலைவர். தலைவர் என்பதைவிட மக்களின் ஒருவன் என்பதே சரியாக இருக்கும். ஆனால் இந்தியர்களில் சிலர் அவரை பிடிக்கவில்லை என்று சொல்லுவது அறிவார்ந்த செயல் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நான் காந்தியை இன்றும் முழுவதும் புரிந்து வைத்து பேசுகிறேன் என்று சொல்லுவது சரியாக இருக்காது காரணம் அவர் பல பரிமாணம் கொண்டவர். காந்தியை கடைசி வரை எதிர்த்த பெரியார் அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்துபோய் சொன்னார் காந்தி ஒரு மகா பெரியவர்! இயேசு, புத்தர் போன்றருக்கு நிகரானவர் காந்தி என்று தனது குடியரசு நாளிதழில் ( 14.02.48) கூறுகிறார். ஆனால் இன்று நான் பள்ளியில் படிக்கும்போது சரி, நான் மேல்படிப்பு படிக்க வெளிநாடு சென்றபோதும் சரி காந்தி ஒரு தே****** டா! என்று வெவ்வேறு வைசைமொழியை வைத்தே காந்தியின் பெயரை கேட்டு இருக்கிறேன். நான் எப்போதும் நினைப்ப...

ஏன் பெரியார் என்ற பெயர் உங்களுக்கு உறுத்துகிறது ? - The Dravidian Rebel

Image
                                                                                                                                                                                                               பெரியார் என்றால் எனக்குள் எப்போதும் ஒரு கர்வம் வருவது உண்டு காரணம் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் இருந்த நேரத்தில் அவர் செய்த விஷயங்கள் ஒரு போராட்டமாக இருந்து இருக்கும் அது நாம் கற்பனை செய்வது போல எளிமையாக இருந்து இருக்காது. எனக்கு முதன் முதலில் பெரியார் என்ற பெய...

முத்துராமலிங்க தேவரும் கபாலி படமும் - Connections between them

Image
கபாலி ரஜினி போஸ்டர்                                      போன மாசம் நான் ஒரு புக்கு படிச்சேன், அப்புறம் தான் கபாலி படத்தில் வர ஒரு Dialogue எதுக்கு வச்சு இருந்தாங்க-னு புரிஞ்சுது, அந்த Scene படத்துல ஒரு முக்கியாமான   Scene-ம் கூட . தலித் சினிமாவின் நாயம்: பா.ரஞ்சித்                                            பா.ரஞ்சித் எடுக்கற எல்லாம் படமும் தலித் அரசியல் பேசும். அதனால சில பேர் அவரை அதை வைத்து சொல்லி தாக்குறது பாக்குறோம். For Example - காலா படம் First Look ரிலீஸ் அப்ப  அபிஷேக் ( Fully Filmy 2 Minutes Review ) ஒரு Tweet போட்டு இருந்தார். அதவாது ரஞ்சித் ஏன் எப்ப பாத்தாலும் தலித் அரசியல் பேசுறாரு வேற விஷயமே இல்லையா பேச என்று ? எனக்கு ஒரு Doubt Mr . அபிஷேக் ஏன் நீங்க இந்த கேள்வியா ஷங்கர் பார்த்து கேக்கல அவர் தொடர்ந்து பிரமணர் சார்ந்த படங்கள் தான் எ...

விமலா என்கிற சிறுவயது பெண் - சிறுகதை

Image
by   arisuonpaa  (deviantart)                                                             ஒரு அழகிய பதினைந்து வயது பெண் , அவள் பெயர் விமலா. விமலாவும் அவளது அம்மாவும் கிராமத்தில் வாழ்கிறார்கள். ஒரு நாள் விமலா அம்மா அவளிடம் அவளது பாட்டிற்க்கு தோட்டத்தில் இருந்து எடுத்த புதிய பழங்களும் மற்றும் நல்ல குடிநீர் எடுத்து செல்ல சொன்னால் - இது பெண்கள் வேலை என்று பிரித்து எடுத்து செல்ல சொல்லவில்லை, உங்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள் , இதில் சமுக உணர்வு மற்றும் காரணம்  இருப்பதால் மட்டுமே சொன்னால். மேலும், அவள் பாட்டிற்கு உடம்பு நன்றாக இருந்தது.  ஒரு முதிர்ந்த வயதினராக தன்னை கவனித்துக்கொள்வதற்கு முழு திறமையும் பாட்டிற்கு இருந்தது. எனவே விமலா ஒரு பையில் பழங்கள் மற்றும் தண்ணிரை எடுத்து கொண்டு பாட்டி விட்டுக்கு சென்றால். பாட்டி வீடு செல்லும் வழி ஒரு அடர்ந்த காட்டு பகுதி கடந்து செல்ல வேண்டும். அங்கு இருக்கும் நிறைய பேர் இந்...