முத்துராமலிங்க தேவரும் கபாலி படமும் - Connections between them



கபாலி ரஜினி போஸ்டர் 

                                    போன மாசம் நான் ஒரு புக்கு படிச்சேன், அப்புறம் தான் கபாலி படத்தில் வர ஒரு Dialogue எதுக்கு வச்சு இருந்தாங்க-னு புரிஞ்சுது, அந்த Scene படத்துல ஒரு முக்கியாமான  Scene-ம் கூட.

தலித் சினிமாவின் நாயம்:


பா.ரஞ்சித் 

                                          பா.ரஞ்சித் எடுக்கற எல்லாம் படமும் தலித் அரசியல் பேசும். அதனால சில பேர் அவரை அதை வைத்து சொல்லி தாக்குறது பாக்குறோம். For Example - காலா படம் First Look ரிலீஸ் அப்ப  அபிஷேக் (Fully Filmy 2 Minutes Review) ஒரு Tweet போட்டு இருந்தார். அதவாது ரஞ்சித் ஏன் எப்ப பாத்தாலும் தலித் அரசியல் பேசுறாரு வேற விஷயமே இல்லையா பேச என்று ? எனக்கு ஒரு Doubt Mr. அபிஷேக் ஏன் நீங்க இந்த கேள்வியா ஷங்கர் பார்த்து கேக்கல அவர் தொடர்ந்து பிரமணர் சார்ந்த படங்கள் தான் எடுக்காரு, மணிரத்தினம் படங்களா-ல உயர் ஜாதினர் பத்தி படம் மட்டுமே தான் வருது கேட்டா அது ஒரு Vera level தரம் உங்களுக்கு-லாம் அது புரியாது என்று ஒரு மொக்க பதில் வரும். சசிகுமார் தொடர்ந்து தேவர் ஜாதி படங்கள் எடுக்குறார், கமல் தேவர்மகன் சண்டியர்-னு பேர் வைக்கிறார். இந்த கேள்வியா அந்த மக்கள் எப்பாவது உங்களை பார்த்து கேட்டது உண்டா எனக்கு நீங்க பேசுறது புரியலா ஏன் எப்ப பார்த்தாலும் மேல் ஜாதி படங்கள் மட்டும் எடுக்குரிங்கனு. அப்புறம் ரஞ்சித் படங்கள் ஜாதி வேணாம்னு தான் பேசுது தலித் தான் உயிந்த ஜாதி  நாங்க தான் ஆண்டா பரம்பரை-னு சொல்லவில்லை....
இதில் எப்படி பெரச்சனை வருகிறது ? நம் பார்வையில் தான் பிரச்சனை. OC  ஜாதி இடத்தில் இருந்து  SC/ST ஜாதியை பார்த்தால் இப்புடி தான் பேசுவோம். SC/ST ஜாதியின் பார்வையில் நாம் இருந்து கொண்டு , அவர்கள் பார்வையில் இருந்து நாம் பார்த்தால் தான் அவர்கள் பிரச்சனையும் வாழ்கையும் புரியும்.

Straight-Matter-க்கு போவோம்:


புத்தகத்தின் அட்டை 

                                   இப்ப Straight-ஆ Matter-க்கு வரேன் அந்த புக்கு பேர் - " Murder in Mudukulathur :Caste and Electoral Politics in Tamil Nadu " இந்த புக்கு முதுகுளத்தூர்-ல நடந்த கொலை வழக்கு மற்றும் அதை சுத்தி நடந்த பெரிய ஜாதி கலவரம் பத்தி சொல்லி இருக்காங்க. இதில் என்ன முக்கியாமான விஷயம் ? இந்த தேவர் vs பள்ளர் ஜாதி பிரச்சனை இன்று வரை நடப்பதற்கு இந்த முதுகுளத்தூர் கொலை தான் காரணம்.

முதுகுளத்தூர்-ல நடந்த கொலை:

இம்மானுவேல் சேகரன் கல்வெட்டு 

                                மதுரை, ராமநாதபுரம் பக்கம் அதிகம் உள்ள ஜாதி மக்கள் தேவர்கள். இவர்களுக்கு பிள்ளை ஜாதி மக்களும் நண்பர்கள். தேவர்களுக்கும் நாடார் ஜாதி மக்களுக்கும் ஆகாது. இரண்டும் BC Category-ல வர ஜாதி தான், ஆன ஒத்து வராது. சாதாரண மக்கள் சண்டை மட்டும் இல்லை. இந்த சண்டை பெரிய அரசியல் தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் Vs காமராஜர் (நாடார்) இடையில கூட இருந்துச்சு. அவர்கள் இருவருக்கும் இருந்த ஜாதி வேற்றுமையில் அரசியல் ரீதியான போட்டி இருந்தது இதில் இருந்து வேறுபட தேவர் காங்கிரஸ்-லில் இருந்து விலகி Forward Bloc என்ற சுபாஷ் சந்திர போஸ் கட்சியில் சேர்ந்து தமிழ்நாட்டின் அக்காட்சியின் தலைவர் ஆகிறார் (For Tamilnadu). காங்கிரஸ் ஆட்சியில் அப்போது காமராஜர் முதலாமைச்சர் கிடையாது அனாலும் முக்கியாமான தலைவர் தான் (Encounter நடந்த  பொது).




5 தேவர்கள் Encounter செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடம் 

                                                அப்போது 5 தேவர்கள் Encounter செய்யப்பட்டார்கள் ( ஜாதி கலவரம் என்று சொல்லபட்டு). இதை செய்தது ராய் என்கிற போலீஸ் அதிகாரி இந்த Encounter தான் காங்கிரஸ் ஆட்சி திமுக ஆட்சியாக மாறுவதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று. சரி ஆன இந்த கொலை வழக்கு தேவர் vs பள்ளர் ஜாதி இடையே நடந்தது. அதனால் நாடார் ஜாதி மக்கள் பள்ளர் மக்களுக்கு பல உதவி செய்தார்கள். பள்ளர் என்பது SC Category-ல வர ஜாதி. இவர்கள் மிது பல காலமாக தேவர் ஜாதி மற்றும் நாடார் ஜாதி தொடர்ந்து இவர்களை பயன்படுத்தி கொண்டு அடித்து துன்புறுத்தி கொண்டு இருந்தார்கள். நாம் படத்தில் எப்புடி ஜாதி சண்டை இருக்குமோ அதை விட மோசமாக உள்ளது உண்மை கதை. நீங்கள் பள்ளர் ஜாதி எப்புடி எல்லாம் துன்புறத்த பட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை படிக்கலாம். பல பள்ளர் மக்கள் கொலை செய்யபட்டார்கள். தேவர் மக்களும் ஜாதி வெறி துண்டி விட்டு அவர்கள் ஜாதி மக்களையும் இழந்தார்கள். முத்துராமலிங்க தேவர் தன்னுடைய பொதுமேடை பேச்சியின் பொது ஜாதி வெறி துண்டும் விதம் பேசி உள்ளார். அதற்கான ஆதாரம் அப்போது வந்த நாளிதழில் கூட இருக்கிறது.


இம்மானுவேல் சேகரன், அம்பேத்கார் சிலை 

                                       இம்மானுவேல் சேகரன்  என்கிற படித்த ஒரு தலித் மக்களின் தலைவன். நிறைய தலித் மக்கள் அவன் பின் இல்லை. குறைந்து அளவு   மக்களே இருந்தனர். அவன்  செப்டம்பர் 111957 அன்று கொலை செய்யபடுகிறான். காரணம் - அவன் பள்ளர் ஜாதியில் படித்தவன் , சில பேர் அவன் பின் இருக்கின்றனர் என்பதும். 

அந்த மாவட்ட கலெக்டர்  அனைத்து  ஜாதி தலைவர்களையும் அழைத்து ஒரு Meeting (கூட்டம்) வைக்குறாரு. அங்கு நடக்கும் ஜாதி கலவரங்கள் குறைப்பதற்கு. இம்மானுவேல் சேகரன் அங்கு தலித் மக்களியின்  தலைவர் என்று தன்னை அடையாள படுத்தி கொண்டு வருகிறார்.

முத்துராமலிங்க தேவர் சிலை 
                         
                           அப்போது முத்துராமலிங்க தேவர் இந்திய பாராளமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். அந்த மாவடத்தியின் நபர் (முக்கியாமான தலைவர்) என்பதால் அவர் அங்கு வருகிறார். அங்கு அவர் சேகரை பார்த்து எரிச்சல் அடைகிறார். தேவர் தன் பின் நிறைய தலித் மக்கள் இருக்கிறாகள் அப்புறம் எப்புடி தலித் மக்கள் தலைவர் என்று சேகர் வர முடியும் என்று கேட்டுகிறார். இம்மானுவேல் சேகர் தேவர்க்கு நிகராக உட்க்கார்ந்து, தன்னை தலித் மக்கள் பிரதிநிதி என்று சொல்லி கொண்டு தேவர் சொல்லும் சில விஷங்களை மறுக்கிறார் ( அதாவது கூட்டத்தில் கலவரத்தை குறைத்து கொள்ள தேவர் தேவர்மக்கள் மீது உள்ள அனைத்து வழுக்குகளையும் எடுக்க சொல்லி கூறுகிறார் அதற்க்கு சேகர் மற்றும் சில ஜாதி தலைவர்கள் மறுத்தனர்) . ஒரு பள்ளர் என்னை பார்த்து எதிரித்து பேசிவிட்டான் என்றும் அவன் என் முன் நின்று பேசும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டது என்று அங்கு இருந்து செல்கிறார். அங்கு வெளியே இருக்கும் தனது ஜாதி (தொண்டர்கள்) சில பேரிடம் இப்பிடி பள்ளர்-லாம் என் முன் பேசுகிறான் என்று சொல்லி தனது ஜாதி மக்களிடம் திட்டி விட்டு செல்கிறார். தேவர் ஜாதி இளைஞர் (தொண்டர்) சில பேர் இதை கேட்டுவட்டு கோபம் அடைந்து அன்று இரவு இம்மானுவேல் சேகரன் கொள்ள படுகிறான். பிறகு அவன் ஒட்டுமொத்த பள்ளர் ஜாதி மக்களுக்கும் ஜாதி தலைவர் என்று கொண்டாடும் படி ஆகிறான் உயிர் இல்லா சிலையாக. இந்த கொளை-னால் பெரிய ஜாதி கலவரம் வெடிக்கிறது. இன்று வரை  தேவர் பிறந்தநாள் அன்று தேவர் பூஜை என்றும் விழா நடக்கும் அதேபோல் இம்மானுவேல் சேகரன்க்கும் பூஜை என்று ஒரு நாள் கொண்டாட படுகிறது. இந்த விழா நடக்கும் பொது இப்போது வரை இரண்டு ஜாதி மக்களும் அடித்து கொள்கின்றனர். இதில் நாடார் ஜாதியும் இணைந்து கொள்ளும். இந்த கொலை வழக்கு காரணமாக முத்துராமலிங்க தேவர் சிறையில் அடைக்க படுக்கிறார். 

கபாலி படத்தில் வில்லனை பார்த்து ரஜினி ஒரு வசனம் சொல்வார், அதவாது 

"நான் முன்னுக்கு வரதுதான் உனக்கு பிரச்னைன்னா, முன்னுக்கு வருவேன்டா... கோட், சூட் போடுவேன்டா...  கால் மேல கால் போட்டு உட்காருவேன்டா... ஸ்டைலா... கெத்தா... " 

இந்த வசனம் இம்மானுவேல் சேகரன் முத்துராமலிங்க தேவரை பார்த்து சொல்லுற மாறி வச்சுக்கலாம் இல்லா இந்த பள்ளர் சமுதாய மக்கள் மீது நீங்க செய்யுற இந்த ஒடுக்குமுறை, நாங்க படிக்குறோம் உங்களுக்கும் நேர் எதிரா சமாமாக இருக்கோம் என்று  இந்த பொறமை-னு  கூட வச்சுக்கலாம். ஆன இந்த வசனம் இம்மானுவேல் சேகரன் என்ற நபர்காக வைக்கப்பட்டது. ரஜினி இங்க தான் பெரிய ஆள் போல நமக்கு  இருக்காரு கமல் தேவர் மகன் என்று வந்தாலும் கிழ ஜாதி என்று சொல்லப்படும் பள்ளர் மக்கள் சார்ப்பாக உள்ள வசனத்தை பேசி  நடிக்கிறது என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்த அரசியல் ரஜினிக்கு தெரியாமல் அவர் செய்யுது இருக்க மாட்டார். ஆனா நிஜா வாழ்கையில் ரஜினி பி.ஜே.பி ஆன்மிக அரசியல் என்றும். தேவர் மகன் என்று பேர் வைத்து படம் நடித்த கமல் முற்போக்கு வாதி என்றும் சொல்வது Inception படம் பாக்குறது போல இருக்கு. எது நிஜம் எது சினிமான்னு(கனவு) தெரியலை!

நமக்கு எதுக்கு வம்பு நம்ம உண்டு நம்ப வேலை உண்டுன்னு இருப்போம்!! 



Comments

  1. Raman Tamilan8:40 AM

    தேவரில் உள்ள நிறைய இளைங்கர்கள் இப்போது மாறிவிட்டார்கள் தோழர். நல்ல பதிவு

    ReplyDelete
  2. Vivek M8:43 AM

    காமராஜர் பற்றி புதிய தகவல். Thanks

    ReplyDelete
  3. பள்ளர்கள் வரலாறுகள் அவர்கள் நிலவுமைக்காரர்களாக 1300 வரை இருந்துள்ளார்கள். நாயக்கர் ஆட்சியில் இவர்கள் நிலங்களை கையகப்படுத்தி
    நாயுடுகளுக்கும் ரெட்டிகளுக்கும் அளித்து பள்ளர்களை அவர்கள்
    நிலங்களில் விவசாய கூலிகளாக்கியது வடுகர்கள் ஆட்சி. ஐவகை தினைகளில்
    இவர்கள் மருத நிலத்தை சார்ந்த வேளாண் குடி மக்கள்

    ReplyDelete

Post a Comment