பெரியாரின் பழமொழிகள்
ஓவியம் - ஹாசீப்கான் (Hasif Khan) |
- ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவது தானே தவிர தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல!
- என்னை சட்டசபைக்குப் போகச் சொல்கிறார்கள். அங்கே போய் ஒன்றும் சாதிக்க முடியாது. வெளியில் இருந்து கொண்டுதான் பாழடைந்த கட்டடத்தை இடிக்க வேண்டுமே தவிர, உள்ளே இருந்து இடித்தால் நம் தலையில் தான் அது விழும்!
- நீதியை மதிக்கிறேன். ஆனால் நீதிமன்றத்தை மதிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை!
- எனது பலக்குறைவினால் பல குறைகள் நேர்ந்தாலும் பொதுவாழ்வில் நான் சாகாமல் இருக்க நேர்மையில் நான் காட்டும் ஜாக்கிரதை தான் காரணம்!
- நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். எனது பகுத்தறிவு சரி என்று சொல்வதை நான் சொல்கிறேன். நீங்கள் உங்கள் பகுத்தறிவு சரி என்று சொல்வதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
- தண்ணீர் எவ்வளவுதான் சூடாக ஆனாலும் நெருப்பை அணைக்கத்தான் முடியும். எரிய வைக்க முடியாது!
- எந்தவிதமான உணர்ச்சிக்கும் இடமில்லாத மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மனிதர்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும் என்ற கவலை எனக்குச் சிறிதும் இல்லை. அப்படி போலி நல்ல பெயர் மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை!
- நான் கல்லடி வாங்கி இருக்கிறேன். அழுகிய முட்டையால் அடிப்பார்கள். மலத்தை வாரி அடிப்பார்கள். இதுகள் என்ன செருப்படியே வாங்கி இருக்கிறேனே!
- நான் அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாமல் சொல்கிறேன். மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாமல் சொன்னால் வெறுப்பு தான் கிடைக்கும்!
- மனித சமுதாயத்திலே ஒழுக்கமும் நல்ல அரசியலும் ஏற்பட வேண்டுமானால்- அயோக்கிய துரோகிகளை/ மான ஈனமற்ற இழிமக்களை/ நாணயம் இல்லாதவர்களை/ ஒழுக்கம் இல்லாதவர்களை/ பொதுவாழ்வில் தலைகாட்டாமல் அடித்து விரட்டி வீழ்த்துவதே சரியான வழியாகும்!
- எவ்வளவோ வகையான நாற்காலிகள் , சோபாக்கள் எங்கள் வீட்டில் இருந்தும் சாய்வு நாற்காலி எனப்படும் ஈஸி சேர் ஒன்றுகூட கிடையாது.நான் அதை உபயோகிக்க விரும்புவதே இல்லை.சோம்பலாகச் சாய்ந்து கிடப்பதும் ஈஸிசேர் பாலிடிக்ஸ் பேசுவதும் எனக்குப் பிடிக்காது!
- பொதுத்தொண்டுக்கு நன்றியை எதிர்பார்ப்பது லஞ்சம் வாங்குவதற்குச் சமமானது. நான் நன்றி எதிர்பார்க்க மாட்டேன். அதுவும் போயும் போயும் இந்த மனிதனிடமா நன்றியை எதிர்பார்ப்பேன்? அவனுக்குத்தான் அப்படி ஒரு குணம் இருப்பதே தெரியாதே!
- எவனோ போட்ட மேடையில் ஏறிநின்று கொண்டு எதையோ பேசிவிட்டு இறங்கி ஓடி ஒளிந்து மாவீரன் ஆனவன் அல்ல நான். குத்துவதாக இருந்தால்கூட எங்கு குத்துவோம் எப்படிக் குத்துவோம் என்று சொல்லிவிட்டுத்தான் செய்வோமே தவிர திடீரெனச் செய்துவிட மாட்டோம். இன்னும் சொன்னால் எனக்கு வீரப்பட்டமே தேவையில்லை!
- வெறுக்கத் துணிந்தவனே வெற்றி பெறுவான்!
- ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதே போல் நீங்கள் நடந்து கொள்வதற்குப் பெயர் தான் நன்னடத்தை!
- நாம் ஜெயித்தோமா தோற்றோமா என்பது முக்கியமில்லை. நாம் நமது கடமையைச் செய்தோமா இல்லையா என்பதுதான் முக்கியம்!
- எனது சரித்திரத்தில் எனக்குத் தலைவனே இருந்ததில்லை!
- நான் ஒன்பது வயதுக்குமேல் எந்தப் பள்ளியிலும் வாசித்தவனல்ல.
- 29க்கும் மேற்பட்ட பதவிகளில் இருந்து சலித்தவன். எல்லாப் பதவிகளும் நான் துப்பிப் போட்ட எச்சில்கள்.
- துரோகம் செய்து அயோக்கியனாய் வாழும் அவசியம் எனக்கு வந்ததில்லை.
- நான் சொன்னதை நானே மாற்றி இருக்கிறேன். அது எனது சுயநலத்துக்காக அல்ல.
- நான் சொல்வதை அப்படியே நம்பாதீர்கள்.
- என் கருத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.
- யாரிடமும் நல்ல பெயர் வாங்கும் எண்ணம் எனக்குக் கிடையாது.
- என்னுடைய நேர்மை தான் என்னை இத்தனை ஆண்டுகள் உயிரோடு வைத்திருக்கிறது. பதவிக்கு போனால் நானே நேர்மையாக இருக்க முடியாது.
- நான் அழிவுவேலைக்காரன்.மக்களை பிரிக்கும் அத்தனையும் அழிய வேண்டும் என்கிறேன்.கோயிலில் சமத்துவம் இருந்தால் எனக்கு கோயிலைப் பற்றியும் கவலை இல்லை.ஓய்வு எடுப்பது எனக்குப் பிடிக்காது.சாகும் வரை செயல்பட வேண்டும். நான் சாப்பிட நான் உழைக்க வேண்டும்.மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கு என்னை எப்போதும் பழக்கிக் கொண்டே வருகிறேன்.எல்லாரும் ஒண்ணு என்று சட்டம் போடு.
- மீறினால் அவனை ஜெயில்ல போடு. இதுதான் என் ஆசை. 1000 ராமசாமி 1000 வருஷம் பாடுபட்டாலும் சாதியை ஒழிக்க முடியாது. மாற்ற முடிகிறதோ இல்லையோ நான் சாவதற்கு முன் எதையாவது செய்ய வேண்டாமா? ஒரு பெரிய மலையை நகர்த்த நினைக்கிறேன். மயிரை வைத்து இழுக்கிறேன். வந்தால் மலை. போனால் மயிறு!
- இந்தியாவில் எப்போதுமே வெற்றி பெறுவது ஜனநாயகம் அல்ல. பணநாயகமே!
- அரசியலில் பதவி பெற எவன் காலையும் எவனும் நக்குவான்! - இறுதி உரையில்இப்படிக் குறிப்பிட்ட பெரியார்
- நம் நாட்டில் அரசியல் மாற்றம் என்பது என்ன தெரியுமா? கெட்டதில் இருந்து கழிசடைக்கு மாறுவதைத்தான்!
- பெரியார் பழமொழியில் எனக்கு பிடித்த சிலவற்றை இங்கு பதிவு செய்து உள்ளது.
Comments
Post a Comment