எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள் - ( S. Ramakrishnan Quotes )
கோப்பு: தேசாந்திரி பதிப்பக விழா - 25.12.2012 எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள். ( S.Ramakrishnan Quotes). தமிழில் ஒரு முன்னணி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்ன் . இவருடைய Quotes எங்கு தேடியும் கடைக்கவில்லை. ஆங்கிலத்தில் உள்ள்து போல தழிழ் எழுத்தாளர் Quotes கிடைக்கவில்லை தான். அதான் நானே இதில் இறங்கி முடிந்தவரை சேகரித்து பதிவு செய்துஉள்ளேன். இது கொஞ்சம் தான் என்று தெரியும் இப்போதிக்கு இதை பதிவு செய்கிறென். முடிந்தவரை Update செய்றன். நீங்களும் எனக்கு அனுப்பலாம், அதையும் நான் Update செய்கியிறேன். தாயின் ஆசைகள் வெளிப்படாதவை. அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகு தான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போல தான் ஆம்மாவின் ஆசைகளும்! அவை வெளிபடாமலே ஒளிந்து கிடக்கின்ற்ன். வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான். உலகில் போர் கருவிகளுக்கு எந்த நாடும் தடை விதித்ததில்லை புத்தகங்களுக்குத் தான் தடை விதித்தார்கள். இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன். ’சக்கரவர்த்தி திருமகள்’ பட...